மகிழ்ச்சியில் நா.உறுப்பினர்கள் , கூட்டு அரசாங்கம் தொடர்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து உருவாக்கிய கூட்டு அரசாங்கம் இனியும் தொடரும் என்று அமைச்சர் மகிந்த அமரவீரவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தெரிவித்துள்ளனர்.

இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்விலேயே இந்த அறிவிப்பு வெளியானது.

ஐ.தே.கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலரும் அமைச்சருமான மகிந்த அமரவீரவும் நாடாளுமன்றத்தில் இதனை அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

இந்த அறிவிப்பு வெளியானது சபையில் இருந்த ஏனைய அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் மேசையில் தட்டி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
தேசிய அரசாங்கம் தொடர்பான உடன்பாடு நடைமுறையிலேயே உள்ளது. அதனை திருத்துவதற்கு எந்த தேவையுமில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, தேசிய அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி விலகவில்லை என்று அந்தக் கட்சியின் செயலாளர் மகிந்த அமரவீர கூறினார்.