கியாஸ் சிலிண்டரை எப்படி உபயோகிப்பது என்பது சிலருக்கு தெரியாமலே போய்விடுகின்றன. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் அவற்றை நாம் அலட்சியமாக கருதி பின்பற்றுவது இல்லை. இவ்வாறான விபத்துகளை தடுப்பது பற்றி பார்ப்போம்..
- கியாஸை பயன்படுத்தும் பெண்கள் அதிகாரப்பூர்வமான கியாஸ் ஏஜென்சிகளிடம் இருந்தே PIS சான்று பெற்ற கியாஸை வாங்க வேண்டும். கியாஸ் ரெகுலேட்டர் மற்றும் பாதுகாப்பு டியூப்களை தகுந்த ஏஜென்சிகளிடம் வாங்க வேண்டும்.
- கியாஸ் பயன்படுத்தும் முறைகள் பற்றி தெரியாவிட்டால் சிலிண்டர் விநியோகிக்கும் நபரிடம் விளக்கமாக கேட்டு தெரிந்து கொள்ளலாம். காற்றோட்டமுள்ள இடங்களில் தரையிலிருந்து நின்ற நிலையிலேயே சிலிண்டரை வைக்க வேண்டும்.
- தரை சமமாக இருக்கும் இடத்திலேயே கியாஸ் அடுப்பை வைத்து, தனிப் பெட்டியிலோ அல்லது தரை மட்டத்தில் இருந்து பள்ளமான குழியிலோ சிலிண்டரை வைக்கக்கூடாது.
- தீ பற்றக்கூடிய சாதனங்கள் அருகில் சிலிண்டரை வைக்க கூடாது. சிலிண்டரை பயன்படுத்தும் போது அதன் அருகில் மண்ணெண்ணய், நெருப்பு, எண்ணை விளக்குகள், மெழுகுவர்த்தி, டீசல் போன்றவை வைத்திருக்கக்கூடாது.
- ரப்பர் டியூப், சிலிண்டர் வால்வின் சரியாக இருக்கிறதா என்று உறுதி செய்து, சிலிண்டரில் கசிவு இருப்பதை சோப்பு நீர் கொண்டு பரிசோதிக்கலாம். எரியும் தீக்குச்சி மூலம் பரிசோதிக்கக் கூடாது.
- நைலான் கயிற்றுடன் கூடிய பாதுகாப்பு மூடி எப்போதும் சிலிண்டரிலேயே பிணைக்கப்பட்டு இருக்க வேண்டும். கியாஸ் கசிவு தென்பட்டால் பாதுகாப்பு மூடியால் வால்வை மூட வேண்டும்.
- அடுப்பில் பாத்திரங்களை வைத்து விட்டு நீண்ட நேரம் கவனிக்காமல் விட்டு விடாதீர்க்ள. சமையல் பொருட்கள் கொதித்து வெளியேறி தீயை அணைத்து விடும். இது கியாஸ் கசிவுக்கு வழி வகுக்கும்.
- பிரிட்ஜ் போன்ற மின் சாதனங்களை சமையல் அறைக்குள் வைத்திருக்கக் கூடாது. அதனால் ஏற்படும் மின் அழுத்த ஏற்றத்தாழ்வு, கியாஸ் கசிவு இருக்கும் பட்சத்தில் விபத்தை உண்டாக்கக் கூடும்.
- சிலிண்டர் ரெகுலேட்டர் நாப்பை மூடிவிட்டு அடுத்ததாக அடுப்பின் நாப்களையும் மூட வேண்டும். பயன்பாடு இல்லாத நேரத்தில் சிலிண்டரின் நாப் எப்போதும் மூடிய நிலையிலேயே இருக்க வேண்டும்.
- காலியான சிலிண்டர்களை பாதுகாப்பு மூடியால் மூடி, காற்றோட்டமான குளுமையான இடத்திலேயே வைத்திருக்க வேண்டும். கியாஸ் டியூப்பை வேறு எதனாலும் மூடாமல் வெளியே தெரியும்படி வைக்க வேண்டும்.
- டியூப்பில் விரிசல் இருக்கிறதா என்பதை அடிக்கடி பரிசோதித்து பார்க்க வேண்டும். 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரப்பர் டியூப்பை மாற்ற வேண்டும். சமையல் எரிவாயு சாதனங்களை அவ்வப்போது பரிசோதித்து சரி செய்ய வேண்டும்.
- நீங்களாகவே ரிப்பேர் செய்வதை தவிர்த்து மெக்கானிக்குகளை பயன்படுத்தி சரி செய்ய வேண்டும். காற்றை விட கியாஸ் கனமானதாக இருப்பதால் கசிவு ஏற்படும் நேரத்தில் அது தரைமட்டத்தை நோக்கி பாய்வதால் கதவுகள், ஜென்னல்கல் திறந்தே இருக்க வேண்டும்.