உத்திரபிரதேசத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் பெண் குழந்தை பிறந்ததால் ஈவு இரக்கமின்றி கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசம் பல்ராம்பூரைச் சேர்ந்த ராஜேஷ் சங்கீதா தம்பதிகளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் வருத்தமடைந்த ராஜேஷ் தனக்கு ஆண்குழந்தை பிறக்காததால் சங்கீதாவிடம் தினமும் சண்டை போட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் சங்கீதா வெளியே சென்று வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு குழந்தை இறந்த நிலையில் இருப்பதை பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார். பின் சங்கீதாவை ராஜேஷ் ஒரு அறையில் பூட்டிவிட்டு குழந்தை உடலை தன் குடும்பத்தாரின் உதவியுடன் புதைத்துள்ளார்.
இதையடுத்து சங்கீதா கதவை உடைத்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பொலிசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.