அனைவருக்குமே தங்கள் வாழ்க்கைதுணை இப்படித்தான் இருக்க வேண்டும் என பல ஆசை கனவுகள் இருக்கும், அந்த வகையில் எந்த எந்த ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட துணை அமையும் என பார்க்கலாம்.
மேஷம்
தனக்கு தானே முதலாளி என்ற வகையில் செயல்படும் மேஷ ராசிக்காரர்கள் உறவுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள், தன் வாழ்க்கைத் துணையின் மேல் அதிக அக்கறை காட்டுவார்கள்.
ரிஷபம்
காதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள், எதையும் யோசிக்காமல் மனதில் பட்டதை பேசிவிடுவார்கள். இந்த ராசி ஆண்களிடம் விட்டுக் கொடுத்து சென்றால் வாழ்க்கை சிறப்பாக அமையும்.
மிதுனம்
இவர்களது நட்பு வட்டாரம் கொஞ்சம் பெரியது தான். இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத செயல்களை செய்து காதலியை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்கள், மிகவும் சுவாரஸ்யமான பண்புகளைக் கொண்டவர்கள்.
கடகம்
துணையிடத்தில் மிகவும் அன்பாக நடந்து கொள்வார்கள். இயல்பாகவே மற்றவர்களிடத்தில் அன்பு செலுத்தும் குணம் உள்ளவர்கள் என்பதால், தன் துணையின் குடும்பத்தையும் சிறப்பாக பார்த்துக் கொள்ளக்கூடியவர்கள்.
சிம்மம்
ஆண்கள் மேன்மையானவர்கள். யார் கருத்து சொன்னாலும் அதை ஏற்றுக்கொண்டாலும், அதில் ஏதேனும் அர்த்தம் இருக்குமோ என்று யோசிப்பவர்கள்.அதிக தன்னம்பிக்கை கொண்ட இவர்கள் தன் துணையே எந்த வகையிலும் மற்றவர்களிடம் விட்டுக்கொடுக்காமல் பேசும் குணம் கொண்டவர்கள். தன் காதலை அடிக்கடி வெளிப்படுத்தி மனைவியை மகிழ்ச்சிப்படுத்துபவர்.
கன்னி
ஆண்கள் எதிலும் சரியாக இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள். இவர்கள் நம்பிக்கை, அமைதி, பகுப்பாய்வு, அறிவுத்திறன் ஆகிய அனைத்திலும் சிறந்து விளங்குபவர். தன் துணையின் மீது அதிக அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுடைய பேச்சுத்திறன் மற்றவர்களைக் கவரும் வகையில் இருக்கும்.
துலாம்
மிகவும் பொறுமையானவர்கள். எதிலும் ஆழ்ந்து சிந்திக்கக்கூடியவர்கள். தன் மனைவிக்கு அவ்வப்போது பல ஆச்சரியங்களைக் கொடுத்து கொண்டே இருப்பார்கள். மற்றவர்களின் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கும் இவர்கள், எப்படிப்பட்டவர்களுடனும் சேர்ந்து பயணிக்கும் குணம் கொண்டவர்.
விருச்சிகம்
ஆண்கள் எளிதில் உணர்ச்சிவசப் படக்கூடியவர்கள். எந்தக் காரியத்திலும் கண்ணும் கருத்துமாக செயல்படக்கூடிய இவர்கள் தன் காதல் மனைவியை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.
தனுசு
புதுமையான செயல்களை செய்வது என்றால் மிகவும் பிடிக்கும். கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்ட இவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் பொறுமையுடன் செயல்படுவார்கள். தனிமையை விரும்புபவர்கள். வாழ்வில் நிறைய சாகசங்களை செய்ய நினைப்பவர்கள். காதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.
மகரம்
தன் துணையின் மீது அதிக அக்கறை வைத்திருப்பார்கள். குறிக்கோளுடன் செயல்படும் இவர்கள் எந்த விஷயமாக இருந்தாலும் அதில் ஏதேனும் ஆதாயம் கிடைக்குமா என்று எதிர்பார்ப்பவர்கள்.
கும்பம்
ஆண்கள் மற்றவர்களை நன்கு எடைபோடுபவர்கள். இவர்கள் பெண்களை மதிப்பவர். தன்னை நம்பி வந்த துணையை கடைசி வரை கருத்தாக இருந்து காப்பாற்றுவார்கள். நிறையத் திறமைகள் இவர்களிடத்திடத்தில் இருக்கும்.
மீனம்
தணிந்து நின்று வாழ்க்கையில் போராடக்கூடியவர்கள். இவர்கள் அனைவரையும் விட தனக்கு அமையும் மனைவிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள், அதீத கற்பனை திறன் கொண்டவர்கள்.