உங்கள் இரத்த குழாய்களை சுத்தம் செய்யும் உணவுகள்!

மேலும் இரத்த அழுத்தத்தை குறைத்தல், கொலஸ்ட்ரால் ஆக்ஸிடேஷனை தடுத்தல் போன்ற வேலைகளை செய்கிறது. மேலும் தமனிகளில் கசடுகள் படியாமல் தடுக்கிறது.
தண்ணீர் விட்டான் கிழங்கு (அஸ்பாரகஸ் கிழங்கு)இந்த கிழங்கு உங்கள் இரத்த குழாய்களில் அடைத்து கொண்டிருக்கும் கசடுகளை சுத்தம் செய்கிறது. இதிலுள்ள நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் இரத்த அழுத்தத்தை குறைத்து இரத்தம் உறைவதை தடுத்து தீவிர இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. மேலும் இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அடைப்பட்ட தமனிகளில் பாதிக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜனேற்றத்தை சரி செய்கிறது. அழற்சிக்கு எதிராகவும் செயல்படுகிறது.

அவகேடாஅவகேடா பழம் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து நல்ல கொழுப்புகளை அதிகரிக்கிறது. மேலும் தமனிகளில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கி அதை சுத்தப்படுத்துகிறது. இதிலுள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. விட்டமின் ஈ கொலஸ்ட்ரால் ஆக்ஸிடேஷனை தடுக்கிறது.

பிரக்கோலிபிரக்கோலியில் அதிகமான விட்டமின் கே சத்து இருப்பதால் தமனிகளில் ஏற்படும் அடைப்பை தடுக்கிறது. மேலும் இரத்த அழுத்தத்தை குறைத்தல், கொலஸ்ட்ரால் ஆக்ஸிடேஷனை தடுத்தல் போன்ற வேலைகளை செய்கிறது. மேலும் தமனிகளில் கசடுகள் படியாமல் தடுக்கிறது.

மீன்கானாங் கெளுத்தி, சூரை மற்றும் சால்மன் போன்ற மீன்களில் நிறைய ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இந்த ஆரோக்கியமான கொழுப்புகள் தமனிகளை சுத்தம் செய்கிறது. மேலு‌ம் இந்த ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நல்ல கொழுப்புகளை அதிகரித்து இரத்த குழாய்களில் ஏற்படும் அழற்சியை தடுக்கிறது. மேலும் தமனிகளில் இரத்தம் உறைதலை தடுக்கிறது.

மஞ்சள்மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற பொருள் இரத்த குழாய்களில் ஏற்படும் அழற்சிக்கு எதிராக செயல்படுகிறது. தமனிகள் தடினமாவதை தடுக்கிறது. எனவே இதை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்த குழாய்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

ஆரஞ்சுஆரஞ்சு பழம் நமது இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இரத்த குழாய்களின் செயல்பாட்டிற்கு சிறந்தது. இதிலுள்ள விட்டமின் சி சத்து தமனிகளை வலுப்படுத்தி இரத்தம் தடைபடுவதை தடுக்கிறது

மாதுளைஇரத்த குழாய்களை சுத்தப்படுத்துவதிலும் அதிலுள்ள நச்சுக்களை வெளியேற்றுவதிலும் மாதுளை முக்கிய பங்கு வகிக்கிறது. இதிலுள்ள பைட்டோ கெமிக்கல்கள் இரத்த தடைபாட்டை தடுப்பதோடு இதிலுள்ள நைட்ரிக் ஆக்ஸைடு தமனிகளில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

ஆலிவ் ஆயில்ஆலிவ் ஆயிலில் அதிகளவில் மோனோசேச்சுரேட் ஒலீயிக் அமிலம் உள்ளது. இவை இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து நல்ல கொழுப்புகளை அதிகரிக்கிறது. எனவே இயற்கையான ஆலிவ் ஆயிலை உங்கள் உணவில் மற்றும் சாலட் போன்றவற்றில் சேர்த்து கொண்டால் இதயத்திற்கு நல்லது.

தர்பூசணிதர்பூசணியில் உள்ள அமினோ அமிலங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் நமது உடலில் நைட்ரிக் ஆக்ஸைடை உருவாக்கி இரத்த குழாய்களில் ஏற்படும் அழற்சியை தடுத்தல், இரத்தம் சீராக ஓட உதவுதல் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

நட்ஸ்உங்கள் இதயத்தை நீங்கள் ஆரோக்கியமாக வைக்க நினைத்தால் நீங்கள் நட்ஸ்யை எடுத்து கொள்ளலாம். அதிலும் பாதாம் பருப்பில் மோனோசேச்சுரேட் கொழுப்பு, விட்டமின் ஈ, நார்ச்சத்துகள் மற்றும் புரோட்டீன்கள் போன்ற ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. இதிலுள்ள மெக்னீசியம் தமனிகளில் படிந்துள்ள கசடுகளை நீக்கி இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

கீரைகள்கீரைகளில் உள்ள பொட்டாசியம், போலேட், நார்ச்சத்து போன்றவை இரத்த அழுத்தத்தை குறைத்து தமனிகளில் படிகின்ற கெட்ட கொழுப்புகளை தடுக்கிறது. தினசரி நம் உணவில் கீரையை சேர்த்து கொண்டால் அதிரோஸ்கிளிரோஸ் போன்ற தீவிர இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.

தக்காளிதக்காளியில் உள்ள லைக்கோபீன் கெட்ட கொழுப்புகளை குறைப்பதோடு இதில் உள்ள நார்ச்சத்துகள் தமனிகளில் படிந்துள்ள கசடுகளை நீக்க உதவுகிறது. எனவே தக்காளியை உங்கள் உணவிலோ அல்லது ஜூஸ் அல்லது சாலட்டுடன் சேர்த்து சாப்பிட்டு உங்கள் இதயத்தையும் இரத்த குழாய்களை யும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்