குளித்து முடித்தவுடன் கை , கால் பாதங்களில் தோல் சுருங்குவது ஏன்?

நாம் தினமும் குளித்து வருகையில் புத்துணர்ச்சி பெறுவதாக உணர்வோம்.
காரணம் நாம் தூங்கி எழுந்து குளித்தவுடன் ஒரு தெளிவு கிடைக்கும். நம்முடைய தோல்களும் மிருதுவாக இருக்கும்.

ஆனால் சிலநேரங்களில் நாம் குளித்து முடித்தவுடன் நம் கைகள் மற்றும் கால் பாதங்களை பார்த்தால் தோல் சற்றே சுருக்கங்களுடன் தோன்றும். அதே போல அதிக நேரம் நீரில் ஊறினாலோ அல்லது மழையில் நனைந்து வந்தாலோ கைகளில் தோல் உதிர்ந்து சுருக்கங்கள் ஏற்படும்.

இதற்கு காரணம் அனைவருடைய தோல்களிலும் எண்ணெய் பசை என்பது இருக்கும்.
அதிக நேரம் நீங்கள் நீரில் குளிக்கும் போதும் சரி மழையில் நீண்ட நேரம் நனைந்து வரும் போதும் சரி நீரினால் சருமத்தில் இருக்கும் அந்த எண்ணெய் பசை நீக்கப்படுகிறது.

இது தற்காலிகமான செயல் தான். மீண்டும் சருமத்தில் எண்ணெய் பசை உருவாகிவிடும். ஆனால், நீரினால் எண்ணெய் பசை தற்காலிகமாக நீக்கப்படும் போது நமது தோலானது வெளிப்புற சருமத்தை உள்பக்கமாக இழுக்க செய்கிறது.

நமது உடலில் ஒவ்வொரு பகுதி தோலும் ஒவ்வொரு தன்மை கொண்டிருக்கும். அவற்றில் கால்பாதம், மற்றும் விரல் நுனியிலுள்ள தோல்கள் மட்டும் தான் மிகவேகமாக சுருங்கும் தன்மை கொண்டிருக்கின்றன.

உயிரற்ற செல்கள் மற்ற உடல் பாக தோலுடன் ஒப்பிடுகையில் பாதம் மற்றும் உள்ளங்கையில் இருக்கும் தோலில் நிறைய உயிரற்ற செல்கள் இருக்கும். ஆகவே, நீரில் முழுமையாக நனைந்து விடுகிறது. இதனால் மேல் தோல் உள் இழுக்கபடுவதாலும், தற்காலிகமாக எண்ணெய் பசை நீக்கப்படுவதாலும் தான் சுருக்கங்கள் ஏற்படுகின்றன. எனவே கைகளில் ஏற்படும் திடீர் சுருக்கங்களை பற்றி நினைத்து கவலைப்பட வேண்டாம்.