யாழ் திருநெல்வேலிப் பகுதியில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் நேற்று முன்தினம் இரவு வாள் வெட்டுக்கு உள்ளாகியுள்ளார்.
குறித்த மாணவன் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் வசித்து வந்த குடும்பப் பெண்ணுடன் முறைதவறிய தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகித்த அப்ப பெண்ணின் கணவன் மாணவனை வெட்டியுள்ளதாகத் தெரியவருகின்றது.
தொடை மற்றும் பிட்டப் பகுதிகளில் வெட்டுக்காயங்களுக்குள்ளான மாணவனை அயலவர்கள் மீட்டு யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட போது மாணவன் அதற்கு மறுப்புத் தெரிவித்து, அப்பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பெற்று, அன்றிரவே குறித்த மாணவன் கடும் காயங்களுடன் முச்சக்கர வண்டியில் தனது சொந்த இடமான முல்லைத்தீவுக்குச் சென்றுள்ளதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதே வேளை மாணவனை வெட்டியவரின் வீ்ட்டிலேயே குறித்த பல்கலைக்கழக மாணவன் மதிய நேரச் சாப்பாடு மற்றும் இரவு நேரச் சாப்பாட்டை பெற்று வந்ததாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாணவனை வெட்ட வந்த குறித்த வீட்டுக்காரன் கடும் மது போதையிலேயே மாணவனை துரத்தி துரத்தி வெட்டியுள்ளார்.
மாணவனைத் துரத்தி வெட்டிய வீட்டுக்காரனை அயலவர்கள் சேர்ந்து பிடித்து விசாரித்த போதே மாணவனின் முறையற்ற பாலியல் தொடர்பு வெளி வந்ததாக தெரியவருகின்றது.
இதே வேளை மாணவனை வெட்டிய குடும்பஸ்தரின் மனைவி இன்று காலை தற்கொலைக்கு முயன்று அயலவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் அத்துடன் குறித்த பெண்ணுக்கும் உடம்பில் கடுமையான அடிகாயங்கள் காணப்படுவதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாணவனுடன் தொடர்புடையதாக கருதப்படும் 50 வயதனா பெண், திருமணம் முடித்த இரு பெண்பிள்ளைகளுக்கு தாய் எனவும் தெரியவருகின்றது.