நாடு திரும்பிய பிரியங்க பெர்னாண்டோ…!

பிரித்தானியாவுக்கான இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ சற்றுமுன்னர் நாடு திரும்பியுள்ளார்.

இலங்கையின் சுதந்திர தினத்தன்று பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தை நடத்திய தமிழர்களை எச்சரிக்கும் வகையில் செயற்பட்டிருந்தார் என பிரியங்க பெர்னாண்டோ மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து குறித்த சம்பவம் ஊடகங்கள் மற்று்ம சமூவலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தொடர்ந்து அவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டதுடன், ஜனாதிபதியின் உத்தரவில் மீண்டும் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் பிரியங்கர பெர்னாண்டோ மீண்டும் நாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளார்.