சிறுநீரக நோய்களுக்கு மருந்தாக நடராஜர்!

சிறுநீரகம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாக திகழ்கிறார் பஞ்சநதனத்தில் செய்யப்பட்ட நடராஜர்.

திருச்சி- சென்னை அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பாடலூர்.

இங்கிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் திருஊற்றத்தூர் என்ற கிராமம் உள்ளது, இங்கே உள்ள ஆலயத்தில் பஞ்சநதன கல்லால் செய்யப்பட்ட அபூர்வ நடராஜரின் ஆசியை பெறலாம்.

ஆசியாவிலேயே மிகவும் அரிதான பஞ்சநதன கற்கள் சூரியனில் இருந்து வெளிப்படும் ஆரோக்கியமான கதிர்வீச்சினை சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டது.

இங்குள்ள இறைவி சிவகாம சுந்தரி அன்னை தன் முகத்தை சாய்த்து பஞ்சநதன நடராஜரை பார்ப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பஞ்சநதன நடராஜர் சிறுநீரகம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாக திகழ்கிறார்.

சுமார் ஒரு கிலோ வெட்டி வேரினை 48 துண்டுகளாக மாலை கோர்த்து வழிபட வேண்டும், பின்னர் ஒவ்வொரு நாள் இரவும் 48 நாளைக்கு இரவில் வெட்டி வேரை ஊற வைத்து காலை வெறும் வயிற்றில் அருந்த வேண்டும், இதனால் அனைத்து நோய்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.