பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவுரவ் சோப்ரா வீட்டில் பார்த்து வைத்த பெண்ணை ரகசியமாக திருமணம் செய்துள்ளார். இந்தி தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் படங்களில் நடித்து வருபவர் கவுரவ் சோப்ரா. ஆக்ஷன் கிங் அர்ஜுனின் ஒற்றன் படத்தில் நடித்துள்ளார் கவுரவ்.
சல்மான் கான் நடத்தும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர். காதலித்து தோல்வி அடைந்த அவருக்கு திடீர் என்று ரகசியமாக திருமணம் நடந்துள்ளது.
உங்களின் அன்பும், ஆசியும் தேவை என்று கூறி தான் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை கவுரவ் ட்விட்டரில் வெளியிட்டார். அதை பார்த்த பிறகே அவருக்கு திருமணமான செய்தி அனைவருக்கும் தெரிய வந்தது.
கவுரவ் சோப்ராவின் திருமணம் அவரது சொந்த ஊரான டெல்லியில் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் கவுரவின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
நான் முன்பு காதலித்த காலத்தில் காதல் முறிந்த பல ஆண்டுகள் கழித்தும் அது பற்றி பேசினார்கள். அதனால் தான் திருமணத்தை விமரிசையாக நடத்தவில்லை. என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அனைவருக்கும் தெரிய வேண்டியது இல்லை என்கிறார் கவுரவ்.
ஹிதிஷா திரைத்துறையை சேர்ந்தவர் இல்லை. அவரை என் முந்தைய காதலிகளுடன் ஒப்பிடுவது நியாயம் இல்லை. இந்த தேவையில்லாத வேலையால் தான் நான் ரகசியமாக திருமணம் செய்து கொண்டேன் என்று கவுரவ் தெரிவித்துள்ளார்.