காலாவதியான கடவுச்சீட்டில் வெளிநாடு செல்ல முயற்சித்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக நடைபெறும் வழக்கு விசாரணையில், நின்று கொண்டு சாட்சியமளிக்க தடுமாறிய விமல் வீரவன்சவுக்கு கதிரை வழங்கிய சம்பவம் நீர்கொழும்பு நீதிமன்றில் இரண்டு நாள்களுக்கு முன்னர் நடைபெற்றுள்ளது.
வழக்கின் போது விமல் வீரவன்ச சாட்சிக் கூண்டில் நிற்கத் தடுமாறியுள்ளார். வழக்கு விசாரணை நிறைவடையும் வரை நாற்காலியில் அமர்ந்திருப்பதற்கு சட்டத்தரணிகளின் ஊடாக அனுமதி கோரப்பட்டது.
அதற்கமைய அங்கு அமர்ந்திருந்து சாட்சியளிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சாட்சியாளர் கூண்டில் விமல் வீரவன்சவுக்கு அமர்ந்திருப்பதற்கு நாற்காலி ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதிலிருந்தே அவர் சாட்சியமளித்துள்ளார்.