யாழில். இந்து ஆலயம் ஒன்று இனம்தெரியாத நபர்களால் உடைத்து சேதமாக்க ப்பட்டு உள்ளதுதுடன் , ஆலயத்தினுள் இருந்த விக்கிரகங்களும் சேதமாக்கப்பட்டு உள்ளது. யாழ்.செம்மணி பகுதியில் யாழ்.வளைவுக்கு அருகில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயமே நேற்று வியாழக்கிழமை உடைத்து சேதமாக்கப்பட்டு உள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் யாழ். காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். வடக்கில் அண்மைக்காலமாக இந்து ஆலயங்கள் சேதமாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.