வலைப்பந்தாட்ட பயிற்சிக்கு வர மறுத்த மாணவியின் கன்னத்தில் ஆசிரியர் பலமாக அறைந்ததால் காதில் இரத்தம் வந்த நிலையில் குறித்த மாணவி கம்பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொத்மலை கல்வி வலயத்தில் அமைந்து ள்ள பாடசாலையொன்றிலேயே நேற்றுமுன்தினம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் புஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சம்பவ தினம் தரம் பத்தில் கல்வி கற்று வந்த குறித்த மாணவி பாடசாலையைவிட்டு வெளியேறிய வேளையில்வலைப்பந்தாட்ட பயிற்று விப்பாளரான ஆசிரியர் குறித்த மாணவியை பயிற்சிக்கு வருமாறு அழைத்துள்ளார்.
இதன்போது மாணவி தனக்கு சுகயீனம் காரணமாக இன்று வர முடியாது என கூறிய சந்தர்ப்பத்திலேயே மேற்படி ஆசிரியர் மாணவியின் கன்னத்தில் பலமாக அறைந்ததாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளைபுஸல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.