யாழ். ஏழாலை மத்தியில் குடும்பப் பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் வீட்டுக்கிணற்றிற்குள் இருந்து நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ். ஏழாலை பகுதியில் வசித்துவரும் திருமதி அனுஷா பாலகிருஷ்ணன் எனும் பெண்மணி யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் தனது மகளை கணவனுடன் நுவரெலியாவிற்குச் சுற்றுலா அனுப்பிவிட்டு தான் மாத்திரம் தனிமையில் வீட்டில் இருந்துள்ள நிலையிலேயே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.
திருமதி .அனுஷா பாலகிருஷ்ணன் (வயது-47) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் அவரது உறவினர்கள், அயலவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இச்சம்பவமானது எப்போது நிகழ்ந்தது என்பது அறியாத நிலையில் இவரை காணாமல் அயலவர்கள் தேடிய போதே கிணற்றில் சடலமாக இவர் கணப்பட்டுள்ளார்.
இம் மரணம் தொடர்பில் அப் பகுதியில் பாரிய குழப்பமும் ஐயமும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.