சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை கடந்த சில வருடங்களாகவே தமிழகத்தை உலுக்கி எடுத்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சென்னையில் நடந்த சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை கொலைக்கு ஒரு நீதி கிடைத்தது.
இந்த நிலையில் மீண்டும் ஒரு ஜீரணிக்க முடியாத சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது. திருவாரூர் மாவட்டம் நெடுச்சேரிப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் 4ம் வகுப்பு மாணவியை அதே பகுதியை சேர்ந்த இரு சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மாணவியின் பெற்றோர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் இவ்வாறான செயலில் ஈடுபட்டுள்ளனர். விவரம் அறியாத சிறுமி பெற்றோரிடம் வயிற்றுவலி எடுப்பதாக கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து மருத்துவனை அழைத்து சென்று பரிசோதித்த போது தான் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ள விவரத்தை அறிந்துள்ளனர்.
இது குறித்து சிறுமியிடம் கேட்ட பொழுது, பக்கத்து வீட்டில் வசிக்கும் 2 அண்ணா தான் என்னை அப்படி செய்தார்கள் என்று கூறியுள்ளார்.
சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்பேரில் அண்டை வீட்டில் வசிக்கும் முத்துக்கிருஷ்ணனையும், தீபனையும் காவல்துறையினர் கைது செய்த செய்துள்ளனர். சிறுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.