கார்த்தி தீரன் வெற்றியால் செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றார். தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் கார்த்தி இன்று இந்த உயரத்தில் இருக்கின்றார் என்றால் அதற்கு அவரின் முதல் படமே பிரமாண்ட வெற்றி அடைந்தது தான் காரணம்.
ஆம், பருத்தீவிரன் ரிலிஸான தினம் இன்று தான், கார்த்தி சினிமாவிற்கு வரும் போதே ஒரு தரமான படைப்பில் தான் கால் பதித்தார்.
அமீரின் இயக்கத்தில் யுவனின் மிரட்டல் இசையில் பருத்திவீரன் தமிழகம் முழுவதுமே பட்டையை கிளப்பிய படம்.
இன்றும் மனதை விட்டு நீங்காத கிளைமேக்ஸ், ப்ரியாமணியின் மிரட்டலான நடிப்பு என பருத்திவீரன் படத்தில் நடித்த எல்லோர் வாழ்க்கையிலும் திருப்புமுனை தந்த படம்.
கார்த்தி இந்த படத்திற்கு பிறகு பல வெற்றிகளை கொடுத்து இருக்கலாம், ஆனால், இப்படம் தான் அனைத்திற்குமே பிள்ளையார் சுழி.