பொன்சேகா நல்லவர்! மகிந்த சிபாரிசு!

அமைச்சரவை மாற்றத்தினால் நாட்டில் எந்த மாற்றங்களும் ஏற்பட போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்

நல்லாட்சி அரசாங்கம் இன்று மேற்கொள்ள உள்ள அமைச்சரவை மாற்றம் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த மூன்று வருடங்களாக அரசாங்கத்தினால் அடைய முடியாத வெற்றியை அடுத்த இரண்டு ஆண்டுகளில் எப்படி அடைய முடியும் எனவும் முன்னாள் ஜனாதிபதி கேள்வியெழுப்பியுள்ளார்.

அதேவேளை சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மகிந்த ராஜபக்ச,

“பொன்சேகாவுக்கு அந்த அமைச்சை கொடுப்பது நல்லது. அவர் நல்லவர். பொலிஸ் மற்றும் இராணுவத்தையும் அவரிடம் வழங்க வேண்டும்.

பொன்சேகாவுக்கு இந்த அமைச்சை வழங்குவது எவரும் சொல்லியும் செய்துக்கொள்ள முடியாத வேலை. சுருக்கமாக கூறினால், அமைச்சரவை என்பது எம்மோடு சம்பந்தப்பட்டதல்ல“ எனக் கூறியுள்ளார்.