ஒருவருடைய ஜாதகம், அவர் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில்தான் அமைகிறது. ஜோதிஷ சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்கள் பற்றியும், அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள் மற்றும் அவர்களுக்கு ஏற்ற தொழில் பற்றியும் விளக்கப்பட்டிருக்கிறது.
மூலம்:
இரக்க சிந்தனை உள்ளவர். அரசாங்கத்தால் நன்மை உண்டாகும். தலைமைப் பொறுப்பு வகிக்கும் திறமை படைத்தவர்.
பலரும் இவருக்குக் கட்டுப்படுவார்கள். பெண்களைப் பொறுத்தவரை இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுய ஜாதகத்தில் கிரக நிலைகள் சரியாக ஜோதிடமாமணி கிருஷ்ணதுளசிஇருந்தால் மட்டுமே திருமண வாழ்க்கை நல்லபடியாக அமையும். பார்மசி, விவசாயம் சார்ந்த வியாபாரம் (காய்கறி, பழம், தானியங்கள்), கல்வித்துறை சார்ந்த பணி, ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஈடுபடுவர்.
பூராடம்:
தன்னம்பிக்கை நிறைந்தவர்களாக இருப்பார்கள். மற்றவர்களிடம் அன்பு செலுத்துவார்கள். ஒருவர் கஷ்டப்படுவதாகத் தெரிந்தால், உடனே சென்று உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்.
இனிமையாகப் பேசி அனைவரையும் கவர்வார்கள். தன்னுடைய சொந்த முயற்சியால் முன்னுக்கு வரத் துடிப்பவர். ஆனால், மற்றவர்கள் தன்னுடைய ஆதிக்கத்துக்குக் கீழ் கட்டுப்பட்டு இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள்.
இவர்களுக்கு விவசாயம், ஏற்றுமதி – இறக்குமதி, போக்குவரத்து போன்ற துறைகளில் ஜீவனம் அமையும்.
உத்திராடம்:
இவர்கள் எந்தச் செயலையும் செய்வதற்கு முன்பு ஒருமுறைக்குப் பலமுறை யோசித்தே இறங்கவேண்டும். இல்லையென்றால் பணமும் உழைப்பும் வீணாகிவிடும்.
அவ்வப்போது ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். என்னதான் உடல்நலனில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும், சற்றும் பொருட்படுத்தாமல் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். மருத்துவம், கல்வி, வங்கி, ஆன்மிகம் சார்ந்த துறைகளில் இவர்கள் ஈடுபட்டால், வளமான வாழ்க்கை அமையும்.
திருவோணம்:
நட்சத்திரங்களில் ‘திரு’ என்ற சிறப்புடன் அழைக்கப்படும் நட்சத்திரங்கள் திருவாதிரையும் திருவோணமும்தான். திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மக்களின் அன்பும் ஆதரவும் பெற்றிருப்பார்கள்.
கடவுள் பக்தி நிறைந்தவர்கள். மற்றவர்களிடம் அன்பும் பரிவும் காட்டுவார்கள். சாதுர்யமான அறிவைப் பெற்றிருப்பார்கள். சுரங்கம், பெட்ரோலியம், இயந்திரத் தொழில் போன்ற துறைகளில் ஈடுபடுவர்.
அவிட்டம்:
சமயோசிதமான அறிவும், பேச்சுத் திறனும் கொண்டவர்களாக இருப்பார்கள். நீதி நேர்மையைக் கடைப்பிடிப்பவர்களாக இருப்பார்கள். தவறுகளைத் தட்டிக்கேட்க அஞ்சமாட்டார்கள். தலைமை தாங்கும் தகுதி பெற்றிருப்பார்கள்.
செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்திருக்கும் இவர்களுக்கு காவல்துறை, ராணுவத்துறை, அறிவியல் தொழில்நுட்பத்துறை, இரும்புத்தொழில், பிரிண்டிங் போன்ற தொழில்கள் இவர்களுக்கு ஏற்றது.
சதயம்:
அன்பு, இரக்கம், மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும் நண்பர்கள் கிடைப்பார்கள்.
மனதில் இனம் தெரியாத கவலையோ சஞ்சலமோ இவர்களை அவ்வப்போது வாட்டி எடுக்கும். ஆனால், இயல்பிலேயே இவர்களுக்கு இருக்கும் தெய்வ பக்தியினால் உடனே சமாளித்துக்கொள்வார்கள். வானியல் ஆராய்ச்சி, ஜோதிடம், பத்திரிகை போன்ற துறைகளில் இவர்கள் பிரகாசிப்பார்கள்.
பூரட்டாதி:
அன்பு மனம் கொண்ட இவர்கள் அதிகாரத்துக்கு அடிபணியமாட்டார்கள். இரக்க சுபாவம் கொண்டவர்கள். நிர்வாகத் திறமை கொண்டவர்கள். கல்வியறிவில் சிறந்து விளங்குவார்கள்.
இவர்கள் அடிக்கடி எதையாவது நினைத்து கவலைப்படுவதை வாடிக்கையாகவே நட்சத்திரம்வைத்திருப்பார்கள். அதுபோன்ற சமயங்களில் இவர்கள் தியானத்தில் ஈடுபடுவது நல்லது.
இவர்களில் பலரும் கல்வித்துறையில் ஆசிரியராகவும், வங்கி போன்ற நிதித்துறை சார்ந்த பணிகளிலும் ஈடுபடுவார்கள்.
உத்திரட்டாதி:
இவர்கள் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது. தானும் மகிழ்ச்சியாக இருந்துகொண்டு மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள்.
இசை, நடனம், ஓவியம் போன்ற நுண்கலைகளில் ஆர்வமும் திறமையும் பெற்றிருப்பார்கள். இரக்கமான சுபாவம் கொண்டவர்கள். சுரங்கம், இயந்திரங்கள், இரும்புபொருட்கள், உணவு விடுதி போன்றவற்றால் இவர்களின் வாழ்க்கை வளம் பெறும்.
ரேவதி:
கல்வி அறிவும், அனுபவ அறிவும் நிரம்பப் பெற்றிருப்பார்கள். எல்லோருக்கும் நன்மையை மட்டுமே நினைப்பவர்களாக இருப்பார்கள். செல்வமும் செல்வாக்கும் பெற்றிருப்பார்கள்.
எங்கும் எதிலும் நேர்மையைக் கடைப்பிடிப்பதுடன் மற்றவர்களும் நேர்மையாக நடக்கவேண்டும் என்று நினைப்பார்கள். நிதித்துறை, நீதித்துறை, கடல் சார்ந்த தொழில்கள், ஆன்மிகம் சார்ந்த பணிகள் இவர்களுக்கு அமையும்.