துபாயில் நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் இறந்த நிலையில், திருமண நிகழ்ச்சியில் அவர் பங்கேற்ற கடைசி நிமிட வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக Share செய்யப்பட்டு வருகிறது.
பிரபல திரைப்பட நடிகை ஸ்ரீதேவி, துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். நேற்று இரவு 11.30 மணியளவில், அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், அவர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியது.
இதனை, அவரின் உறவினர் சஞ்சய் உறுதி செய்தார். இதனைத் தொடர்ந்து, பிரபலங்கள் பலரும் ஸ்ரீதேவியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்ரீதேவி பங்கேற்ற திருமண விழாவில், அவரின் கடைசி தருணங்களின் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
Her last visual #RIP #Sridevi pic.twitter.com/NsVrZX74vg
— Arjun Paudel (@day2nightjets) February 25, 2018