இளைஞர் ஒருவரின் மூளையில் 1.8 கிலோ எடையளவில் உருவான ட்யூமர் கட்டியை சுமார் 6 மணிநேரம் அறுவைச் சிகிச்சை செய்து மருத்துவர்கள் அகற்றிச் சாதனை புரிந்துள்ளனர்.
இந்தக் கட்டியே உலகில் மிகப் பெரிய மூளைக் கட்டியாக இருக்கக்கூடும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த அறுவைச் சிகிச்சை மும்பையில் உள்ள நாயர் மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது.
சந்த்லால் பால் என்ற 31 வயது இளைஞருக்கு மூளையில் 1.8 கிலோ எடையுள்ள கட்டியால் கண் பார்வை பாதிக்கப்பட்டிருந்தது.
தற்போது மூளையில் இருந்த கட்டி அகற்றப்பட்ட நிலையில் மீண்டும் கண் பார்வை திரும்ப வர வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சந்த்லால் பாலின் தலையில் இருந்த கட்டி அவரது தலையைவிடப் பெரியதாக இருந்தது. இந்தக் கட்டிதான் உலகில் மிகப் ரிய மூளைக் கட்டியாக இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.