மாதவிடாய் குறித்து கவிதைகள் எழுதிய மாணவிக்கு மத நம்பிக்கையை காயப்படுத்தும் செயல் என கூறி மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் நவாமி ராமச்சந்திரன். இவர் சமீபத்தில் எழுதிய மாதவிடாய் சார்ந்த கவிதைகளுக்காக மிரட்டலுக்கு ஆளாகியுள்ளார்.
மட்டுமின்றி பேஸ்புக்கில் வலதுசாரிகளின் கடுமையான எதிர்வினைகளை எதிர்கொண்டும் வருகிறார்.
இந்த விவகாரம் தொடர்பில் பேசிய அவர், ஏற்கெனவே மாதவிடாய் குறித்து சமூக வலைதளங்களில் பேசியதால் மிரட்டலுக்கு ஆளான இளம்பெண் ஒருவரை ஆதரித்துதான் இந்தக் கவிதையை நான் எழுதினேன்.
என்னை எதிர்ப்பவர்கள் பேஸ்புக்கில் மட்டுமின்றி நேரிலும் மிரட்டல் விடுக்கத் தொடங்கியுள்ளனர் என்றார்.
மேலும் பாடசாலை செல்லும் தமது சகோதரி சகோதரி லட்சுமி அடையாளம் தெரியாத ஒரு கும்பலால் மிரட்டப்பட்டதாகவும்,
பைக்கில் வந்த சில நபர்கள், முகமூடி அணிந்துகொண்டு மிரட்டலில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னால் ஆர்எஸ்எஸ் குழு இருக்கும் என்று தோன்றுகிறது என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதனிடையே சட்டக் கல்லூரி மாணவியான நவாமி ராமச்சந்திரனின் தங்கை லட்சுமியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.