ஏதோ கெட்டது நடக்க போகுது: நடிகை ஸ்ரீதேவியின் இறப்பிற்கு முன் டுவீட் போட்ட அமிதாப்

நடிகை ஸ்ரீதேவியின் இறப்புக்கு முன்னர், பிரபல நடிகர் அமிதாப் பச்சன் போட்ட ஒரு ட்வீட், தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பிரபல நடிகை ஸ்ரீதேவி, துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அங்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்தார்.

இந்நிலையில், ஸ்ரீதேவி இறப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பு, நடிகர் அமிதாப் பச்சன் டுவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், என்னவென்று தெரியவில்லை. ஆனால், ஏதோ கெட்டது நடக்கப் போகிறது என்பது போன்று படபடப்பாக உள்ளது என தெரிவித்திருந்தார்.

இதனால், ஸ்ரீதேவியின் மரணம் குறித்து முன்கூட்டியே அறிந்தது போல், அமிதாப் பச்சன் டுவீட் போட்டிருப்பது டுவிட்டரில் விவாத பொருளாகியுள்ளது