கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று விசேட அறிவிப்பு ஒன்றை விடுக்கும் வேலைத்திட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நெழும் மாவத்தையில் அமைந்துள்ள அலுவலகத்திலேயே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அங்கு பிணை முறி ஆணைக்குழு அறிக்கை மற்றும் பாரிய ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, மஹிந்தவின் கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள வீட்டில் இன்று இரவு உணவு விருந்து ஒன்று வழங்கப்படவுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் குடும்ப உறுப்பினர்களுக்காக விசேட விருந்து நடத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.