கடைசியாக ஸ்ரீதேவியை சந்திக்கும் போது கமல்ஹாசன்? வைரல் வீடியோ

மறைந்த ஸ்ரீதேவி நடிகர் கமல்ஹாசனை கடைசியாக சந்தித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

நடிகை ஸ்ரீதேவி பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருந்தாலும் கமலுடன் தான் அவரின் ஜோடி பொருத்தம் மிக கச்சிதமாக இருந்தது.

கமலும், ஸ்ரீதேவியும் இணைந்து பல மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளனர்.

இருவரும் கடைசி வரை நெருங்கிய நண்பர்களாக இருந்த நிலையில் ஸ்ரீதேவியின் மரணம் கமலை பெரிதும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஸ்ரீதேவியின் மறைவு குறித்து வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்துள்ள கமல், கண்ணதாசன் எழுதித் தந்த கண்ணே கலைமானே தாலாட்டைத் தான் இப்போது ஸ்ரீதேவிக்கு பாட வேண்டும் என உருக்கமாக கூறியுள்ளார்.

கடந்த மாதம் தான் ஸ்ரீதேவியை தாம் கடைசியாக சந்தித்த தருணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீதேவியின் மறைவு குறித்து வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்துள்ள கமல், கண்ணதாசன் எழுதித் தந்த கண்ணே…கலைமானே தாலாட்டைத்தான் இப்போது ஸ்ரீதேவிக்கு பாட வேண்டும் என நெகிழ்ந்தும் உருக்கமாகவும் கூறியுள்ளார். கடந்த மாதம்தான் ஸ்ரீதேவியை தாம் கடைசியாக சந்தித்த தருணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மும்பையில் கடந்த மாதம் நடந்த தனியார் பத்திரிக்கை விருது வழங்கும் நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்து கொண்டனர்.

அப்போது இருவரும் கட்டி தழுவி தங்கள் நட்பை வெளிப்படுத்தியதுடன் ஸ்ரீதேவி கையால் கமல் வாழ்நாள் சாதனையாளர் விருதை வாங்கினார்.