பாலியல் குற்றச்சாட்டுகள் காரணமாக 21 ஊழியர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ரெட் க்ராஸ் என அழைக்கப்படும் சர்வதேச செஞ்சிலுவைக் சங்கம் தெரிவித்துள்ளது.
இத்துறையில் பல்வேறு பாலியல் புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் எழுந்ததன் காரணமாக பாலியல் சேவைகளுக்கு பணம் வழங்கிய ஊழியர்கள் சிலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இன்னும் சிலர் தாங்களாகவே தங்கள் பணியை ராஜினாமா செய்ததாகவும் செஞ்சிலுவை சங்கத்தின் இயக்குநர் டக்கார்ட் ஊடகங்களுக்கு தெரிவித்தார்..
ஜெனிவாவை சார்ந்த செஞ்சிலுவை சங்கம் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக மனித உரிமைகள் அமைப்பு அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து தங்கள் அமைப்பில் உள்ஆய்வு நடத்தியது.
இந்த உள்விசாரணையின்போது 2015ஆம் ஆண்டில் இருந்து பாலியல் சேவைகளுக்கு பணம் வழங்கியதாக அடையாளம் காணப்பட்ட 21 ஊழியர்கள் பணிநீக்கம் அல்லது ராஜினாமா செய்துள்ளனர்
உலகம் முழுவதிலும் மொத்தம் 17 ஆயிரம் உறுப்பினர்களை கொண்ட செஞ்சிலுவை சங்கம், தாங்கள் சேவை செய்யும் சமூகங்களுக்கு இது போன்ற நடத்தைகள் துரோகம் விளைப்பதுபோல் உள்ளதாக குறிப்பிட்ட டக்கார்ட், மனித கவுரவத்திற்கு எதிராக இது இருப்பதாகவும், இதுபோன்ற சம்பவங்களை தடுக்க அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.