தனது 25-நாள் பச்சிளங் குழந்தையை குப்பைத்தொட்டியில் தூக்கி வீசிக்கொன்ற இளம்பெண்ணை டெல்லி பொலிசார் கைது செய்துள்ளனர்.
டெல்லியின் கிழக்கு வினோபூர் பகுதியை சேர்ந்த பெண் நேஹா. GTB மருத்துவமனையில் அவருக்கு பிறந்த குழந்தையை குப்பை தொட்டியில் தூக்கி வீசியுள்ளார். அதையடுத்து அந்த பச்சிளம் குழந்தை இறந்துவிட்டது என்று டெல்லி பொலிசார் தெரிவித்தனர்.
அந்த பெண் தனக்கு பிறந்தது பெண் குழந்தை என்பதை அறிந்த பின்னர் ஒருவித வெறுப்பிலும் கோவத்திலும் குழந்தையை குப்பை தொட்டியில் தூக்கி எறிந்துள்ளார்.
இதை கண்ட அக்கம் பக்கத்தினா் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினா் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனா்.
ஆனால் குழந்தை மருத்துவமனை வருவதற்கு முன்பே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதனைத் தொடா்ந்து குழந்தையின் தாயாரரை பொலிஸார் கைது செய்தனர்.