புதிய அமைச்சரவை மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றது. ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில், மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது மாற்றம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (25) மேற்கொள்ளப்பட்டது. அமைச்சரவை மாற்றம் தொடர்பிலான முழு விவரம்:
அமைச்சர்கள்:
- பிரதமர் ரணில் விக்கிரமசிங்க: சட்டம் ஒழுங்குகள் அமைச்சர்
- லக்ஷ்மன் கிரியெல்ல: அரச நிறுவனங்கள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர்
- கபீர் ஹாசீம்: உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள்
- ஹரின் பெர்னாண்டோ: டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டலுவல்கள்
- ரவீந்திர சமரவீர: வனவிலங்குள் மற்றும் பேண்தகு அபிவிருத்தி
- சாஹல ரத்னாயக்க: இளைஞர் விவகார மற்றும் தென் அபிவிருத்தி
இராஜாங்க அமைச்சர்கள்
- பியசேன கமகே: இளைஞர் விவகார மற்றும் தென் அபிவிருத்தி
- அஜித்.பி.பெரோ: சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு
- கலாநிதி ஹர்ஷ டி சில்வா: தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரம்
பிரதியமைச்சர்
- ஜே.சி. அலவத்துவல: உள்நாட்டலுவல்கள்