அடர்த்தியான புருவம் வேண்டுமா?

அடர்த்தியான புருவம் வளர்வதில்லையா? கவலையை விடுங்கள். இக்கட்டுரையில் அதற்கான சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன .

வைட்டமின் ஈ ஆயில்

வைட்டமின் ஈ கேப்ஸ்யூலில் உள்ள எண்ணெயை துளையிட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.

பின் அந்த எண்ணெயை இரவில் படுக்கும் போது புருவங்களின் மீது தடவி, இரவு முழுவதும் ஊற வையுங்கள்.

மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இந்த செயலை தினமும் ஒருமுறை செய்து வர நல்ல பலனைக் காணலாம்.

கற்றாழை

கற்றாழையின் ஜெல்லை இரண்டு புருவங்களின் மீதும் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள்.

இரவு முழுவதும் நன்கு ஊற வையுங்கள். மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள்.

இந்த செயலை தினமும் செய்து வர, புருவங்கள் அடர்த்தியாக வளர்வதைக் காணலாம்.

வெங்காய சாறு

சிறிது வெங்காயத்தை எடுத்து அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.

பின் அதன புருவங்களின் மீது தடவ வேண்டும். பின்பு 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, கிளின்சர் பயன்படுத்தி, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள்.

இந்த செயலை வாரத்திற்கு 4-5 முறை பின்பற்ற, புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளரும்.