ஸ்ரீதேவியின் மரணத்தின் பின் வெடிக்கும் புதிய சர்ச்சை…

இந்திய திரையுலகின் உச்சத்தில் இருந்த காலத்தில் ஸ்ரீதேவி போனி கபூரை மணந்துக்கொண்டார்.

ஸ்ரீதேவிக்கு போனிக்கபூர் இரண்டாவது கணவர் என்பதும், போனிக்கபூருக்கு ஸ்ரீதேவி இரண்டாவது மனைவி என்பதும் பலருக்கு தெரியாத விடயம்.

ஸ்ரீதேவியை மணப்பதற்காகவும், அவர் மீது கொண்ட காதல் காரணமாகவும் போனி கபூர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்ததாக அப்போதைய ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது.

போனிக்கபூரின் முதல் மனைவிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர், அவர்கள் இந்நாள் வரையும் ஸ்ரீதேவியுடன் பேசியது கிடையாது என்ற தகவலும் வைரலாகி வருகின்றது.

அது மட்டும் இல்லை, தென்னிந்தியாவில் கொடிகட்டி பறந்த காலத்தில் ஸ்ரீதேவி காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். எனினும், இருவருக்கிடையில் ஏற்பட்ட பிரச்சினைகளினால் விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்துள்ளார்.

பின்னர், போனிக்கபூருடன் காதல் மலர்ந்து இருவரும் திருமணம் செய்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.