வருடத்தின் ஒரு மாதத்தில் இரண்டு அமாவாசை ஏற்படுகின்ற நிலையில் சுபகாரியங்கள் எதுவும் செய்ய கூடாது என்பது சாஸ்திர விதியாகும்.
பிறக்கவிருக்கும் சித்திரை மாதத்தில் விளம்பி வருடம் பிறக்கவுள்ளது.
இந்த விளம்பி வருடத்தின் வைகாசி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் கூடுகின்றது.
இதனால் வீடுகளில் எந்த ஒரு சுபகாரியங்களும் நடத்தப்படக்கூடாது என்று மக்கள் மத்தியில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
வசந்த ருது என்ற கூறப்படுகின்ற சித்திரை மாதத்திற்கும் வைகாசி மாதத்திற்கும் இந்த தோஷம் இல்லை இந்த மாதங்களில் இரண்டு அமாவாசைகள் பிறந்தால் சுபகாரியங்கள் நடத்தலாம்.