தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து கொண்டு இந்தியாவுக்கு புறப்படவிருக்கும் யாழ் இந்திய துணைத்தூதுவர் நடராஜனின் பிரியாவிடை நிகழ்வு யாழ் நகரில் நேற்று நடைபெற்றது.இந்த நிகழ்வில் வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் ஆளுனர் றெஜினோல்ட் கூரே வட மாகாண சபை முன்னாள் இந்நாள் அமைச்சர்கள் , தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஈபிடிபியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட பலரும் ஒரே நேரத்தில் கலந்து கொண்டிருந்தனர்.இது அங்கிருந்த பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியிருந்தது.யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் குறித்த நிகழ்வில், இலங்கைக்கான இந்திய துணை தூதுவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டுள்ளதுடன், வடக்கு மாகாண முதலமைச்சரினால் நினைவு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.இதேவேளை, இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண முதல்வர், அமைச்சர்கள், ஆளுநர் உள்ளிட்ட பல அரசியல் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டுள்ளனர்.அரசியலில் மட்டும் முட்டி மோதிக்கொள்ளும் இவர்கள் இவ்வாறான விருந்து நிகழ்வுகளில் மட்டும் எப்படித் தான் கூடிக் குலவிக் கொள்கிறார்கள் என பொதுமக்கள் கேள்வியெழுப்புகின்றனர் .ஏன் இவர்களால், இனப்பிரச்சினை தீர்வு விடயத்திலும் சரி, தமிழ் மக்களின் பிரச்சினைகளிலும் சரி, ஒன்றாக கை கோர்த்து நிற்க முடியாது எனவும் பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர்.