ஆசிரியை ஒரு வருடத்தின் பின் மீண்டும் பாடசாலைக்கு….!

யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடவடிக்கையால் சரியாக ஒரு வருடத்தின் பின் மீண்டும் பாடசாலைக்கு சென்றுள்ளார் கிளிநொச்சியை சேர்ந்த ஆசிரியை ஒருவர்.

கிளிநொச்சி கல்வி வலயத்தில் நகரத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றிய ஆசிரியர் ஒருவர் 2017.02.23 ஆம் திகதி தான் கற்பித்த பாடசாலையில் வேறு பாடசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

இதற்கு எதிராக குறித்த ஆசிரியர் ஆளுநரிடம் முறையிட்டமைக்கு அமைவாக அவர் மீண்டும் வலயக் கல்விப் பணிமனைக்கு இணைப்புச் செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த ஆசிரியை யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

இதனையடுத்து குறித்த ஆசிரியைக்கு கற்பிப்பதற்கு ஒரு பாடசாலையை வழங்குமாறு பணித்திருந்தது.

தற்காலிகமாக ஆசிரியைக்கு கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பிறிதொரு ஆரம்ப பாடசாலையில் கடமையாற்ற அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் குறித்த ஆசிரியை தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக தொடர்ந்தும் தனியொரு நபராக இருந்து போராடிய நிலையில் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் ஆசிரியர் சங்கம் என்பன தொடர்ச்சியாக மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக 2017.02.23 பாடசாலையில் இருந்து இடைநிறுத்தப்பட்ட ஆசிரியை மீண்டும் 2018.02.23 ஆம் திகதி குறித்த பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் தனது உத்தியோகபூர்வ வாகனத்தில் குறித்த ஆசிரியை ஏற்றிச் சென்று கடமையை பொறுப்பேற்க உதவியுள்ளார்.