மஹிந்த ராஜபக்ஷவை நம்பவில்லையா சீனா?

2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் நடந்த ஜனா­தி­பதி தேர்­தலில், மஹிந்த ராஜபக் ஷவை ஆட்­சியில் இருந்து அகற்­று­வதில் தீர்க்­க­மான பங்கை வகித்­தி­ருந்த சர்­வ­தேச சமூகம், தற்­போ­தைய கூட்டு அர­சாங்­கத்தைக் காப்­பாற்­று­வ­திலும் குறிப்­பி­டத்­தக்க பங்கை ஆற்றியிருக்கிறது.

உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் கூட்டு அர­சாங்­கத்தில் இடம்­பெற்­றி­ருந்த இரண்டு பிர­தான கட்­சி­க­ளுக்கும் ஏற்­பட்ட பெரும் பின்­ன­டைவு, இலங்கையின் அர­சியல் தலை­வி­தி­யையே மாற்றி விடக் கூடிய நிலை ஒன்­றுக்கு இட்டுச் சென்­றி­ருந்­தது.

உள்­ளூ­ராட்சித் தேர்தல் என்ன, குப்­பை­களை அகற்­று­வ­தற்கும் வீதி­களைச் செப்­ப­னி­டு­வ­தற்கும் தானே என்ற ஏள­ன­மான கருத்­துக்குச் சவால் விடும் வகையில், அமைந்­தி­ருந்­தது அண்­மைய தேர்தல்.

இந்த தேர்தல் முடி­வுகள், தேசிய அளவில் ஓர் அர­சாங்­கத்தை மாற்றும் வல்­ல­மையைக் கொண்­ட­தா­கவும் மாறி­யி­ருந்­தது.

index  மஹிந்தவை நம்பவில்லையா சீனா? - ஹிரிகரன் (கட்டுரை) index3

மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும், ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் இணைந்து உரு­வாக்­கிய கூட்டு அர­சாங்­கத்தை விளிம்பு நிலைக்குக் கொண்டு சென்­றி­ருந்­தது இந்தத் தேர்தல் முடிவு.

ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்தும் கூட்டு எதி­ர­ணி­யி­னதும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­னதும், திட்டம் நிறை­வே­றி­யி­ருந்தால், உள்ளூராட்சித் தேர்­தல்கள் கூட, நாட்டின் அர­சியல் தலை­வி­தியை மாற்றி எழுதக் கூடும் என்ற வர­லாறு உரு­வாக்­கப்­பட்­டி­ருக்கும்.

கூட்டு அர­சாங்கம் காப்­பாற்­றப்­பட்­டுள்­ளதால், அத்­த­கை­ய­தொரு நிலை உரு­வா­கா­வி­டினும், உள்­ளூ­ராட்சித் தேர்­தலும் கூட அர­சாங்­கத்தை ஆட்டி வைக்க முடியும் என்­பதை உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

இந்தக் கூட்டு அர­சாங்கம்  ஆட்டம் காணத் தொடங்­கி­ய­வுடன், அமெ­ரிக்கத் தூதுவர்  அதுல் கெசாப், இந்­தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து, சீனத் தூதுவர் செங் சுவே­யுவான், பிரித்­தா­னிய தூதுவர் ஜேம்ஸ் டௌரிஸ் போன்ற வல்­லமை பொருந்­திய நாடு­களின் இரா­ஜ­தந்­தி­ரிகள் ஜனா­தி­ப­தி­யையும், பிர­த­ம­ரையும் தனித்­த­னி­யாகச் சந்­தித்துப் பேச்சு நடத்­தினர்.

அந்தப் பேச்­சுக்கள் பற்­றிய அதி­கா­ர­பூர்வ தக­வல்கள் வெளி­யி­டப்­ப­டாத போதிலும், அவர்­களின் இலக்கு கூட்டு அர­சாங்­கத்தைப் பாது­காப்­பதை மையப்­ப­டுத்­தி­ய­தா­கவே இருந்­தது.

மஹிந்த ராஜபக் ஷவை ஆட்­சியில் இருந்து அகற்றி, மைத்­தி­ரி­பால சிறி­சேன- ரணில் விக்­கி­ர­ம­சிங்க இணைந்த கூட்டு அர­சாங்­கத்தை உரு­வாக்­கிய மேற்­கு­லக நாடு­களும் இந்­தி­யாவும், மீண்டும் அதே அர­சாங்­கத்தைப் பாது­காக்­கவும் கள­மி­றங்க வேண்­டிய நிலை ஏற்பட்டிருக்­கி­றது.

தம்மை ஆட்­சியில் இருந்து நீக்­கி­யது இந்­தியப் புல­னாய்வு அமைப்பும் அமெ­ரிக்­கா­வுமே என மஹிந்த ராஜபக் ஷவே கூறி­யி­ருக்­கிறார். இதே கருத்தை அவ­ரது சகோ­த­ரர்­க­ளான பசில் ராஜபக் ஷவும், கோத்­தா­பய ராஜபக் ஷவும் கூட வெளி­யிட்­டி­ருந்­தனர்.

மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ ஆட்­சிக்கு வரு­வ­தையோ, அல்­லது அவ­ரது ஆத­ர­வுடன் நிமால் சிறி­பால டி சில்­வாவைப் பிர­த­ம­ராகக் கொண்ட ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி ஆட்­சி­ய­மைப்­ப­தையோ மேற்­கு­லகம் விரும்­ப­வில்லை.

காரணம், அவ்­வா­றான ஒரு நிலை ஏற்­பட்டால், மஹிந்த ராஜபக் ஷவை மீண்டும் அதி­கா­ரத்­துக்குக் கொண்டு வரு­வ­தற்­காக அமைக்கப்பட்ட பாதை­யா­கவே அது இருக்கும் என்­பது மேற்­கு­லக நாடு­களின் கருத்­தாக உள்­ளது.

mahinda1  மஹிந்தவை நம்பவில்லையா சீனா? - ஹிரிகரன் (கட்டுரை) mahinda1 e1519595213323

மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் அதி­கா­ரத்­துக்கு வரு­வதை மேற்­கு­ல­கமோ இந்­தி­யாவோ விரும்­பாமல் இருப்­ப­தற்குக் கூறப்­ப­டு­கின்ற சில கார­ணங்கள் வியப்­பா­ன­வை­யா­கவே இருக்­கின்­றன.

மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சிக்கு வந்தால், தற்­போ­தைய கூட்டு அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­படும் நல்­லி­ணக்க மற்றும் பொறுப்­புக்­கூறல் முயற்­சிகள் முடங்கிப் போய்­விடும்.

அர­சி­ய­ல­மைப்பு மாற்றம் தடைப்­பட்டு விடும் இவையே, மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சிக்கு வரக் கூடாது என்­ப­தற்கு மேற்­கு­லகம் கூறி­யி­ருக்­கின்ற காரணம்.

மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சிக்கு வந்தால், தற்­போ­தைய அர­சாங்­கத்­தினால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட ஜன­நா­யக இடை­வெளி மற்றும் இந்த அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­படும்- அரை­குறை நல்­லி­ணக்க முயற்­சி­களும் கேள்­விக்­குள்­ளாகும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

ஏனென்றால், இப்­போ­தைய அர­சாங்கம் முன்­னெ­டுத்த இந்த நட­வ­டிக்­கை­களை ஆபத்­தா­ன­தா­கவும், புலி­களின் மீள் எழுச்­சிக்கு வித்­திடும் என்றும் மஹிந்த அணி­யினர் விமர்­சித்­தி­ருந்­தனர்.

எனவே அவர்கள் அதி­கா­ரத்­துக்கு வந்­தாலும் இதனைத் தொட­ர­மு­டி­யாது. அது­போ­லவே, பொறுப்­புக்­கூறல் தொடர்­பாக தற்­போ­தைய அரசாங்கம் எந்த நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுக்­காத போதிலும், அதற்­கான வாக்­கு­று­தி­களை சர்­வ­தேச சமூ­கத்­திடம் கொடுத்திருக்கிறது.

அது நிறை­வேற்­றப்­ப­டுமா -இல்­லையா என்ற கேள்­விக்கு அப்பால், மீறல்கள் நிகழ்ந்­தி­ருப்­பதை ஏற்­றுக்­கொண்டு, அதற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றா­வது கூறி­யி­ருக்­கி­றது.

ஆனால் மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் ஆட்­சியில் இருந்த போது, ஒரு­போதும் மீறல்கள் நிகழ்ந்­ததை ஏற்றுக் கொண்­ட­து­மில்லை. அதற்குப் பொறுப்­புக்­கூ­று­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தாக குறைந்­த­பட்சம் வாக்­கு­று­தி­களைக் கொடுக்­கவும் கூடத் தயா­ராக இருக்­க­வில்லை.

625.0.560.320.160.600.053.800.700.160.90  மஹிந்தவை நம்பவில்லையா சீனா? - ஹிரிகரன் (கட்டுரை) 625எனவே மீண்டும் மஹிந்த ராஜபக் ஷ அதி­கா­ரத்­துக்கு வந்தால், பொறுப்­புக்­கூ­ற­லுக்­கான எந்த நகர்­வு­களும் எடுக்­கப்­ப­டாமல் முடங்கிப் போகும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

இந்தக் கார­ணங்­களை முன்­னி­றுத்­தியே தற்­போ­தைய அர­சாங்­கத்தைப் பாது­காக்க முனை­வது போல மேற்­கு­லகம் காட்டிக் கொண்­டாலும், இவையே முழு­மை­யான கார­ணங்கள் அல்ல.

மஹிந்த ராஜபக் ஷவை வெளி­யேற்­றிய நட­வ­டிக்­கை­யி­லா­கட்டும், அவ­ரது அண்­மைய அதி­கா­ரத்தைப் பறிக்கும் நட­வ­டிக்­கை­யி­லா­கட்டும், அதற்கு அப்­பாலும் சில கார­ணிகள் செல்­வாக்குச் செலுத்­தி­யி­ருந்­தன. அவை பூகோள. மற்றும் பிராந்­திய அர­சி­யலின் பால் தொடர்­பு­டைய விட­யங்கள்.

மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் அதி­கா­ரத்­துக்கு வரும் போது, பிராந்­திய அர­சி­யலில் சீனாவின் செல்­வாக்கு அதி­க­ரிக்கும் வாய்ப்­புகள் உள்ளன. இலங்­கையில் ஏற்­க­னவே சீனா தனது முத­லீ­டு­களின் மூலம் ஒரு பல­மான தளத்தைக் கட்­டி­யெ­ழுப்­பி­யி­ருக்­கி­றது.

இலங்­கையில் சீனாவின் பொரு­ளா­தாரத் தலை­யீட்டை வெறு­மனே வியா­பார நோக்­கு­டை­ய­தாகக் கூற முடி­யாது,

அதே­வேளை இலங்­கையில் சீனா கொட்­டு­கின்ற நிதி தனியே அந்த நாட்டு முத­லீ­டுகள் மாத்­தி­ர­மன்றி இலங்­கை­யர்­களின் தலையின் மீது ஏற்றி விடப்­படும் கடன் சுமை­யு­மே­யாகும்.

“ஒரு நாட்டைக் கைப்­பற்­று­வ­தற்கு அல்­லது அடி­மைப்­ப­டுத்­து­வ­தற்கு இரண்டு வழிகள் உள்­ளன.ஒன்று வாள். இன்­னொன்று கடன்.” இந்தக் கருத்தைக் கூறி­யவர் அமெ­ரிக்க அர­சி­ய­லா­ள­ரான ஜோன் அடம்ஸ். இவர் 1797ஆம் ஆண்டு முதல், 1801ஆம் ஆண்டு வரை நான்கு ஆண்­டுகள் அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யாக இருந்­தவர்.

அவ­ரது இந்தக் கருத்தின் அடிப்­ப­டையில் பார்த்தால், இலங்கை உள்­ளிட்ட நாடு­களை தன் வசப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­காக கடன் என்ற ஆயு­தத்­தையே பயன்­ப­டுத்திக் கொள்­கி­றது.

மூலோ­பாயச் சொத்­துக்­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கும், செல்­வாக்கை வலுப்­ப­டுத்திக் கொள்­வ­தற்கும் சீனா கடன்­களைப் பயன்­ப­டுத்திக் கொள்­கி­றது என்ற கருத்து இப்­போ­தைய அர­சி­ய­லா­ளர்கள் மத்­தியில் உள்­ளது.

இந்­தியப் பெருங்­கடல் பிராந்­தி­யத்தில் சீனாவின் தலை­யீ­டு­களும் செல்­வாக்கும் அதி­க­ரிக்கும் போது, தற்­போ­தைய அதி­காரச் சம­நி­லையில் குழப்பம் ஏற்­படும்.

அதற்­கான அறி­கு­றிகள் ஏற்­க­னவே வெளிப்­படத் தொடங்கி விட்­டன. சீனாவை கட்­டுப்­ப­டுத்­துதல் மேற்­கு­ல­கிற்கும் இந்­தி­யா­வுக்கும் இப்போது முதன்­மை­யான தேவை­யா­கவும் தெரி­வா­கவும் மாறி­யி­ருக்­கி­றது.

இங்­கி­ருந்தே, கொழும்பின் அதி­கார மோதல்­க­ளையும் அதில் புறத் தலை­யீ­டு­க­ளையும் கணிக்க வேண்­டி­யி­ருக்­கி­றது.

கொழும்பில் அதி­கார மாற்றம் ஒன்­றுக்­கான அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­பட்ட போது, ஏற்­பட்ட குழப்பம், அமெ­ரிக்கா, இந்­தியா, பிரித்­தா­னியா போன்ற நாடு­க­ளுக்குப் பதற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யது.

ஒரு­வேளை மஹிந்த ராஜபக் ஷவோ அல்­லது மஹிந்த ராஜபக் ஷவின் ஆத­ர­வு­ட­னான அர­சாங்­கத்தை அமைத்தால், தற்­போ­தைய அரசின் திட்­டங்கள் கொள்­கைகள் எல்­லாமே திசை திருப்­பப்­பட்டு விடும் என்று அந்த நாடுகள் கலக்­க­ம­டைந்­தன.

மஹிந்த ராஜபக் ஷவை தமது நண்­ப­னா­கவோ தமக்குச் சாத­க­மான ஒரு ஆட்­சி­யா­ள­ரா­கவோ பார்க்க மேற்­கு­ல­கமும் இந்­தி­யாவும் தயாராக இல்லை. அதனால் தான், அவர் அதி­கா­ரத்­துக்கு வரு­வதை மீண்டும் தடுக்­கின்ற முனைப்­பு­களில் அவை ஈடு­பட நேரிட்­டது.

அதே­வேளை, இதே கவலை சீனா­வுக்கும் இருந்­ததா என்­பது கேள்­விக்­குறி. ஏனென்றால், சீனத் தூது­வரும் கூட, அர­சியல் நெருக்­க­டியின் உச்­சத்தில், ஜனா­தி­ப­தி­யையும், பிர­த­ம­ரையும் சந்­தித்துப் பேசினார்.

ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்பின் போது, ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டாலும், சீனாவின் முத­லீ­டு­க­ளுக்கு ஆபத்து ஏற்­ப­டாது என்ற உறு­தி­மொழி சீனத் தூது­வரால் பெறப்­பட்­டது. இந்தத் தக­வலை சைனா ரைம்ஸ் ஊடகம் வெளி­யிட்­டி­ருந்­தது.

மஹிந்த ராஜபக் ஷ சீனாவின் நண்பன் என்று சொல்­லப்­பட்­டாலும், மஹிந்­தவின் ஆட்சி மீண்டும் ஏற்­பட்டால் தமது முத­லீ­டு­க­ளுக்கு ஆபத்து ஏற்­ப­டுமோ என்ற கவலை சீனா­வுக்கும் இருக்­கி­றது.

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா­வுக்கு 99 ஆண்டு குத்­த­கைக்கு வழங்­கிய விட­யத்தில் சீனா­வுக்கு எதி­ரான நிலைப்­பாட்­டி­லேயே மஹிந்த ராஜபக் ஷ இருந்து வரு­கிறார்.

imageproxy  மஹிந்தவை நம்பவில்லையா சீனா? - ஹிரிகரன் (கட்டுரை) imageproxyதாம் ஆட்­சி­ய­மைத்தால் அம்­பாந்­தோட்டை துறை­முகம் மீளப் பெறப்­படும் என்றும் அவர் கூறி­யி­ருக்­கிறார். இது சீனா­வுக்கு அச்­சத்தை ஏற்ப­டுத்­தி­யி­ருக்­கலாம்.

அதே­வேளை, இலங்­கையில் அர­சியல் குழப்பம் ஏற்­பட்ட போது, அமெ­ரிக்க- இந்­திய தூது­வர்கள் ஜனா­தி­பதி, பிர­த­மரைச் சந்­தித்­த­மைக்கும், சீனத் தூதுவர் அவர்­களைச் சந்­தித்­த­மைக்கும் வேறு­பா­டுகள் உள்­ளன.

சீனா எப்­போ­துமே, பிற நாடு­களின் அர­சியல் விவ­கா­ரங்­களில் தலை­யி­டு­வ­தில்லை என்று கூறிக் கொள்ளும் நாடு. அப்­ப­டி­யான நிலையில், சீனத் தூதுவர் உள்­நாட்டு அர­சியல் விவ­கா­ரங்­களில் தலை­யிட முனைந்­தமை முக்­கி­ய­மா­ன­தொரு விடயம்.

அர­சியல் ரீதி­யா­கவும் இலங்­கையில் சீனா தலை­யிட ஆரம்பித்துள்ளது என்பதற்கான அடையாளம் இது. ஆனால் இது மஹிந்தவுக்குச் சாதகமாக இல்லையோ என்ற சந்தேகம் இருக்கிறது.

மஹிந்த ராஜபக் ஷவை சீனாவே இயக்குகிறது என்றும், சீனாவின் நெறிப்படுத்தலிலேயே அதிகாரத்தைக் கைப்பற்றும் முனைப்புகளில் அவர் ஈடுபட்டதாகவும் ஒரு கருத்து உள்ளது,

அவ்வாறாயின், அதிகார மாற்றம் ஒன்று ஏற்பட்டால் சீனாவின் முதலீடுகளுக்கு உத்தரவாதம் தருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், சீனத் தூதுவர் ஏன் போக வேண்டும்? இது சிந்திக்க வேண்டிய விடயம்.

இந்த நிலையில் வைத்துப் பார்க்கின்ற போது மஹிந்த ராஜபக் ஷவை சீனாவும் நம்பவில்லை என்றும் கருத தோன்றுகிறது.

இப்போதைய நிலையில் கொழும்பில் அதிகார மாற்றம் நிகழ்வதை உலகின் முக்கிய வல்லாதிக்க நாடுகள் விரும்பவில்லை என்றே தெரிகிறது. இவர்களின் விருப்பத்தை மீறி ஓர் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதே மஹிந்தவுக்கான இப்போதைய சவால்.

2015இல் மாத்திரமன்றி, 2018இலும், ஆட்சியைப் பிடிக்கின்ற மஹிந்தவின் கனவுக்கு சர்வதேச சமூகமே சிக்கலாக மாறியிருக்கிறது. இந்த நிலை நீடிக்கும் வரை ரணிலின் காட்டில் மழையாகத் தான் இருக்கும்.

 ஹிரிகரன்