விந்து உடலில் தங்கினால் ஆபத்து என்று படித்தேன். அப்படியானால் பிரம்மச்சாரியாக சிலர் வாழ்வது எப்படி? அவர்களின் ஆணுறுப்பு ஆரோக்கியமாக இருக்குமா?
விந்து உடலில் தங்கினால் ஒரு ஆபத்துமில்லை. இது எல்லாம் அறியாமையினால், அந்த காலத்திலிருந்து நாம் கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கும் ஜமக்காளத்தில் வடிகட்டிய முட்டாள் தனமான மூடநம்பிக்கை.
பிரம்மச்சாரிகளுக்கு உடலமைப்பும், விந்து வெளியேற்றும் பிறரைப் போல் தான் இருக்கும். அவர்களுக்கு மனக்கட்டுப்பாடு அதிகம். தட்ஸ் ஆல்!
மனதைக் கட்டுப்படுத்துவதுதான் ஆண்மையின் உச்சக்கட்ட அறிகுறி. ஆண்மை ரசாயனமான டெஸ்டோஸ்ட்ரானை நேர்த்தியாக அடக்கி ஆண்டால் மட்டுமே அது சாத்தியம் என்பதால் பிரம்மச்சாரிகளின் ஆண்மை ரொம்பவே அதிகமாகுமே தவிர குறையாது.
இது தவிர சில ஆண்களுக்கு மரபணு, உறுப்பு, ஹார்மோன் கோளாறுகள் காரணமாக அவர்களுக்கு தாம்பத்தியம் பிடிப்பதில்லை. இதுவெல்லாமே விருப்பத்தைப் பொறுத்த விஷயங்கள்தான்.