பிரபல நடிகர்களுக்கு முத்தம்…. வைரலான ஓவியா வீடியோ!

களவாணி, மதயானை கூட்டம் என்ற சிறிய படத்தில் அறிமுகமாகி நடித்தவர் நடிகை ஓவியா. இவர் பட வாய்ப்பின்றி இருக்கும் போது பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அதன் பிறகு பல விளம்பரங்களிலும், திரைபடங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார்.

பிக்பாஸில் ஆரவ் ஓவியாவிற்கு கொடுத்த மருத்துவ முத்தம் வைரலாகி பரவிய நிலையில், ஓவியாவிடமிருந்து ஒரு செல்பி எடுத்தாலே போதும் என்ற நிலைக்கு ரசிகர்களிடம் வரவேற்பையும் பெற்றார். இந்நிலையில் தனியார் பத்திரிக்கை நடத்திய விருது விழாவில் அனைத்து திரைப்பட கலைஞர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் சதிஷ், ரோபோ ஷங்கரும் இணைந்து ஓவியாவிடன் முத்தம் கேட்டுள்ளனர். அடுத்தடுத்து இருவருக்கும் சிரித்த முகத்துடன் முத்தத்தை கொடுத்துள்ளார். இவரின் அந்த காணொளி தற்போது சமூக வலைதளத்தில் பலரின் மீம்ஸ்களுக்கு இரையானது.