எனக்கு அம்மா வேணும்.. மகளுக்கு ஆறுதல் கூறும் பிரபலங்கள்..

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஸ்ரீதேவி ஹோட்டல் அறையில் குளியல் தொட்டியில் குளிக்கும்போது எதிர்பாராமல் மூழ்கி இறந்ததாகவும் அவர் இறப்பதற்கு முன் மது அருந்தியதாகவும் தடவியல் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

துபாய் அரசின் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் முடிய நேரமாகலாம் அதனால் ஸ்ரீதேவியின் உடலை மும்பைக்கு கொண்டுவர தாமதமாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஸ்ரீதேவியின் மூத்தமகள் ஜான்வி தாயின் மரண செய்தியை கேட்டு துடிதுடித்து போனாராம்.

சுனில் கபூரின் வீட்டில் தங்க வைக்கப்பட்ட ஜான்வி அழுது கொண்டே இருப்பதாகவும் ‘அம்மா வேணும்’ என்று சொல்லியபடியே இருக்கிறாராம். ஜான்வியின் நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் சுனில் கபூரின் வீட்டிற்கு சென்று ஜான்வியை பார்த்து ஆறுதல் கூறி வருகிறார்கள்.