இலங்கை அரசியல்வாதிகளில் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பட்டியலை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழ் ஒன்றை மேற்கோள்காட்டி இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
01. அதனடிப்படையில் 18 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து மதிப்புகளுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முதலாமிடத்தில் உள்ளார்.
02. 6 கோடி 80 லட்சம் அமெரிக்க டொலர் சொத்து மதிப்புகளுடன் இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், அமைச்சருமான அர்ஜூன ரணதுங்க இரண்டாமிடத்தில் உள்ளார்.
03. ஒரு கோடி 40 லட்சம் அமெரிக்க டொலர் சொத்து மதிப்புகளுடன் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்றாமிடத்தில் உள்ளார்.
04. 19 லட்சம் அமெரிக்க டொலர் சொத்து மதிப்புகளுடன் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் நான்காமிடத்தில் உள்ளார்.
05. 17 லட்சம் அமெரிக்க டொலர் சொத்து மதிப்புகளுடன் முன்னாள் பிரதி அமைச்சரான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஐந்தாமிடத்தில் உள்ளார்.
06. 14 லட்சம் அமெரிக்க டொலர் சொத்து மதிப்புகளுடன் அமைச்சர் பௌசி ஆறாமிடத்தில் உள்ளார்.
07. 14 லட்சம் அமெரிக்க டொலர் சொத்து மதிப்புகளுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க ஏழாமிடத்தில் உள்ளார்.
08. 13 லட்சம் அமெரிக்க டொலர் சொத்து மதிப்புகளுடன் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க எட்டாமிடத்தில் உள்ளார்.
09. 9 லட்சம் அமெரிக்க டொலர் சொத்து மதிப்புகளுடன் நாடாளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா ஒன்பதாமிடத்தில் உள்ளார்.
10. 8 லட்சத்து 60 ஆயிரம் அமெரிக்க டொலர் சொத்து மதிப்புகளுடன் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க பத்தாமிடத்தில் உள்ளார்.