தலை முடி வளர, முடி உதிர்தலை தடுக்க…!

இன்றைய ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவருக்கும் பொது பிரச்சனையாக இருப்பது முடி கொட்டுவது தான்.

விளம்பரங்களில் காட்டப்படும் விலையுயர்ந்த கெமிக்கல்களை நம்பி ஏமாறாமல் எளிதாக கிடைக்கக்கூடிய கற்றாழையை பயன்படுத்தி முடி உதிர்வதை எளிய முறையில் தடுக்க முடியும்.

தேவையான பொருட்கள்:-

சோற்றுக் கற்றாழை
தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்
படிகாரம்

செய்முறை:-

கற்றாழையை தோல்சீவி அதன் சதைப்பகுதியை துண்டுதுண்டாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போடவேண்டும். அதில் சிறிது படிகாரப் பொடியை தூவி சிறிது நேரம் ஊறவிட வேண்டும். இப்பொழுது கற்றாழையில் இருந்து நீர் பிரிந்து தனியாக இருக்கும். இந்த நீரின் சம அளவிற்கு தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயை சேர்த்து சுண்ட காய்ச்ச வேண்டும். பிறகு இந்த தைலத்தை தண்ணீர் படாமல் பாட்டிலில் சேகரித்து தினந்தோறும் தடவி வந்தால் முடி உதிர்வது நிற்பதோடு தலை முடி நன்றாக வளரும்.