நீண்ட காலத்தின் பின்னர் இரண்டாவது முறையாக பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் கரிகோச்சி (Viceroy) புகையிரதம் யாழ்ப்பாணம் வருகைதந்துள்ளது.நேற்றுக் காலை (26) 8 மணியளவில் அநுராதபுரம் பிரதான புகையிரத நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி புகையிரதம் புறப்பட்டது.இது யாழ். புகையிரத நிலையத்திற்கு மாலை 4 மணியளவில் வருகை தரும் என சொல்லப்பட்டாலும் ஆனையிறவில் வந்துகொண்டிருந்தபோது இயந்திரக் கோளாறு காரணமாக நிண்டநேரம் தரித்து நின்றது.பின்னர் அது சீர் செய்யப்பட்டு யாழ். புகையிரத நிலையத்துக்கு இரவு 7 மணியளவில் வந்துசேர்ந்தது.காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு நாளை பயணிக்கும் என கூறப்பட்ட போதும் அங்கு செல்லாது என்றும் இன்று காலை 10 மணிக்கு யாழ். புகையிரத நிலையத்திலிருந்து சுற்றுலாப்பயணிகளுடன் கல்கிசை நோக்கி மீண்டும் பயணிக்கவுள்ளது.வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பயணிப்பதற்கு ஏற்றவகையில் புகையிரதத்தில் நான்கு குளிரூட்டப்பட்ட சொகுசு ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.