உங்க ராசிக்கு எந்த கிழமையில் தங்கம் வாங்கலாம்…

எந்தெந்த நாட்களில் தங்கம் வாங்கினால் ராசியாக இருக்கும் என பலரும் பொதுவாக நல்ல நாளாக கருத வாங்குவது புதன் கிழமை அல்லது வெள்ளிகிழமை.

இதற்காக நல்ல நேரம் கூட பார்த்து தான் நம் வீட்டு பெண்கள் நகை வாங்க ஆர்வம் காட்டுவார்கள்..அதிலும் குறிப்பாக அக்ஷய திருதி அன்று நகை வாங்கினால்,தொடர்ந்து செல்வம் அதிகரிக்கும்,மேலும் மேலும் நகை வாங்கும் அதிர்டம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இதற்கிடேயே,ஒரு குறிப்பிட்ட ராசிக் காரர்கள் ஒரு குறிப்பிட்ட நாளில் நகை வாங்கினால்,செல்வ செழிப்பு அதிகரிக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.

கன்னி, விருச்சிகம், தனுசு

இந்த மூன்று ராசிக்காரகர்களும்,சனி, வியாழன் ஆகிய இரு நாட்களில் வாங்குவது ஆக சிறந்ததாக உள்ளது. மற்ற நாட்களில் நகை வாங்கினால்,அந்த நகை அவர்களிடம் தங்காதாம்.

12 ராசியினரும் எந்த நாட்களில் நகை வாங்கலாம்

மேஷம் – ஞாயிறு, வெள்ளி

ரிஷபம் – புதன், வெள்ளி

மிதுனம் – திங்கள், வியாழன்

கடகம் – ஞாயிறு, திங்கள், புதன்

சிம்மம் – புதன், வெள்ளி

கன்னி – சனி

துலாம் – திங்கள், வெள்ளி

விருச்சிகம் – சனி

தனுசு – வியாழன்

மகரம் – புதன், வெள்ளி

கும்பம் – புதன், வெள்ளி, ஞாயிறு

மேற்குறிப்பிட்ட நாட்களை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்… நகை வாங்கும் போது உங்களுக்கான நாள் எது என்பதை மறந்து விடாதீர்கள்…