யாழில் இரு உணவகங்களுக்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாண மாநகருக்கு உட்பட்ட பகுதியில் காலாவதியான உணவுப் பொருள் விற்ற மற்றும் சுகாதார சீர்கேடாக உணவகங்களை நடத்திய 6 கடை உரிமையாளர்களுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்று தண்டம் விதித்தது.

யாழ்ப்பாண மாநகர சபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கடைகள் மற்றும் உணவகங்களில் திடீர் சோதனை நடத்தினர்.

நாவாந்துறை மற்றும் வண்ணார்பண்ணைப் பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது கடைகளில் காலாவதித் திகதியுடன் கூடிய உணவுப் பொருள் வைத்தி ருந்த குற்றச்சாட்டில் 4 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அத்துடன் சுகாதார முறைப்படி அமையாத உணவகம் இரண்டும் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த 6 வழக்குகளும் கடந்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

விசாரணையில் சந்தேக நபர்கள் குற்றங்களை ஏற்றுக் கொண்டனர்.

அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை யுடன் தண்டப்பணம் அறவிடப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

இதில் இரண்டு உணவகங்களுக்கு கடந்த வாரம் சீல் வைக்கப்பட்டன. உணவகங்களை சீர்செய்த பின்னர் அவற்றைத் திறப்பதற்கு நீதிமன்று அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.