வாழ்க்கையை மாற்றியமைக்கும் ஆரோக்கியங்கள்..! மகிழ்ச்சியின் உச்சம் தொடலாம்.?

மனிதனுடைய அமைதியான வாழ்க்கைக்கு ஒன்பது வகையான ஆரோக்கியங்கள் மிக முக்கியமாக வரையறுக்கப்பட்டு இருக்கிறது . பின் பற்றினால் நிச்சயம் மாற்றம் உணரலாம். உங்கள் வாழ்க்கையை புரட்டி அற்புதமாக மாற்றி விடும் என்பது உண்மை.

உடல் ஆரோக்கியம்

ஒவ்வருவரும் தனது உடல் இயங்கும் விதத்தை அறிந்திருக்க வேண்டும். சரியான உணவை உண்பது, தினசரி தேவையான அளவு உடற்பயிற்சி செய்வது, உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது போன்றவை உடலின் இயக்கம் சரியானபடி நடக்க உதவும். போதை ஏற்படுத்தும் மாத்திரை, மது போன்ற வற்றை தவிர்ப்பதும், நோய் மற்றும் உடல் நலக்குறைவில்லாமல் இருப்பதும் உடல் ஆரோக்கியமாகும் .

மன ஆரோக்கியம்

தினசரி மாறி வரும் நமது சூழ்நிலைகளிலுள்ள உண்மைகளை ஏற்றுக் கொண்டும், தனது தினசரி வாழ்க்கைத் தேவைகளுக்காக அனைத்தையும் அனுசரித்தும் வாழ்வதே மன ஆரோக்கியம்.

உணர்ச்சிகள் ஆரோக்கியம்

நாம் உணர்ச்சிவயப்படும் போது வெளிபடுத்தும் உணர்ச்சிகள் நமக்கு நன்மை செய்வதாக இருக்கவேண்டுமே தவிர கெடுதல் செய்வதாய் ஆகிவிடாமல் பார்த்துக்கொள்வதே உணர்ச்சிகள் ஆரோக்கியம் .

சமூக ஆரோக்கியம்

வீட்டிலுள்ளவர்களிடமும், உறவினர்களிடமும் அண்டைவீட்டாரிடமும், நண்பர்களிடமும் பணி இடத்திலும், மற்றும் நாம் உறவாடும் அனைவரிடமும் நாம் வைத்திருக்கும் உறவின் தரம் சமூக ஆரோக்கியமாகும்.

சுற்றுப்புற ஆரோக்கியம்

கற்று, நீர், மண் மற்றும் நாம் வசிக்கும் இடத்தின் சுற்றுவட்டாரத்தை வளமாகவும், மகிழ்ச்சி தரகூடியாதகவும், பாதுகாப்பாகவும் வைத்திருப்பது சுற்றுப்புற ஆரோக்கியமாகும் .

நிதி ஆரோக்கியம்

பணம் இல்லையானால் அமைதியும், மகிழ்ச்சியும் வாழ்க்கையில் இருக்காது.சரியாக திட்ட மிடல், கடின உழைப்பு, சிக்கனம் சேமிப்பு, முதலீடு என தேவைக்கேற்ப பணத்தை பெருக்கிக் கொள்வதே நிதி ஆரோக்கியமாகும்

தொழில் ஆரோக்கியம்

ஏதாவது ஒரு தொழிலில் நம்மை ஈடுபடுதிக் கொள்கிறோம். வேலையில் நமக்குள்ள விருப்பம், நமது திறமை வேலையிடத் துள்ள நல்ல சூழ்நிலை, திருப்தியான வருமானம் மற்றும் வசதிகள் ஆகியன தொழில் ஆரோக்கியமாகும் .

ஆன்மீக ஆரோக்கியம்

பிற உயரினங்களின் உரிமைகளை மதித்தும் அவை மகிழ்ச்சியுடன் வாழ விருப்பம் கொண்டும் அவைகளுடன் இணக்கமாய் இருந்து இந்த ஆன்மீக நோக்கத்தை அறிந்து, ஆன்மீகப் பாதையில் வாழவேண்டும்.இயற்கையின் நியதிகளை உணர்ந்து அதற்கு பணிந்து வாழ்வதே ஆன்மீக ஆரோக்கியமாகும்

அறச்செயல் ஆரோக்கியம்

மனிதன் மனம் போன போக்கில் போககூடியவன். ஆணவம், சுயநலம், பொறமை, சாமர்த்தியப்பேச்சு என்பன தன்னுள் இருப்பதை அறியாதவன். அதன் விளைவு களில் சிக்கி வாழ்க்கையை களிப்பவன். எளிமை, தூய்மை, கடமை, நியாயம் போன்ற குணங்கள் தான் இந்த இயற்கையையும் தன்னையையும் சிறப்பாக வாழவைக்கும்.என்பதை அலட்ச்சிய படுத்தி வாழ்பவன். நீதி நெறியுடன் (ethics) நன்னடத்தையோடு(moral) நன்மதிப்புடன்(value) உலகம் போற்றும் நல்ல குணங்களை கொண்டிருப்பதே அறச்செயல் ஆரோக்கியமாகும்.

சிறந்த உடல் நலம் பெற சரியான ஆரோக்கியத்திர்க்காக சிரமப்படவேண்டும் மேற்கூறிய பிரிவுகளில் ஒரு பிரிவு மற்றொரு பிரிவினை பாதிக்கலாம் இதனால் மொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படும். இந்த அனைத்து பிரிவு களையும் புரிந்துகொண்டு சரியாக நடக்கும் ஒருவர் சிறந்த உடல் நலம் பெற்றவராவார்.