உங்கள் நட்பு வட்டாரத்தில் அழகாக இருக்கும் ஆணை விட, சுமாரான நபர் ஒருவருக்கு அதிக பெண் தோழிகள் இருக்கலாம்.
உடனே… அவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு போலடா என்று சிலர் பொறாமையில் பொங்குவார்கள். இருக்கலாம்… சிலருக்கு நிஜமாகவே நல்ல மச்சம், நல்ல இடத்தில் இருக்கலாம்.
அந்த மச்சத்தின் காரணமாக கூட அவர்கள் வாழ்வில் நல்லது, கெட்டது அவர்கள் அறியாமலே அளவுக்கு அதிகமாக நடக்கலாம். இதில், முகத்தில் எந்த இடத்தில் மச்சம் இருந்தால் என்ன அதிர்ஷ்டம் என்று இந்த தொகுப்பில் காணலாம்…
1 – 3
குழந்தை வயதில் நீங்கள் கலகம் ஏற்படுத்தி சுட்டித்தனமான நபராக இருந்திருக்கலாம். நீங்கள் பிறப்பாலேயே ஒரு சிறந்த கிரியேட்டிவ் சிந்தனை உள்ளவராக இருக்கலாம்.
உங்களிடம் சுதந்திரமாக ஒரு வேலையை கொடுத்தால், அதை செம்மையாக செய்து முடிப்பீர்கள். இந்த மூன்று இடத்தில் மச்சம் இருந்தால், நீங்கள் வேலையை காட்டிலும், சொந்த தொழிலில் சிறந்து காணப்படுவீர்கள். ஒரு பாஸாக இருக்க உங்களிடம் லக் நிறையவே இருக்கிறது.
4
நீங்கள் உணர்ச்சிவசப்பட கூடிய நபர். அவ்வப்போது உங்களை நீங்களே வெளிபடுத்திக் கொள்வீர்கள்.
இது உங்கள் கவர்ச்சி மற்றும் ஜொலிக்கும் குணம் என்று கூறலாம். ஒரு இடத்தில் அல்லது காரியத்தில் பல கருத்துக்கள் முன்வைத்தால் நீங்கள் குழம்பி போய்விடுவீர்கள்.
5
இந்த மச்சமானது உங்கள் வாழ்வில் செல்வம் சார்ந்த நல்ல லக் இருக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது. ஆனால், இதை அடைய நீங்கள் நன்கு உழைக்க வேண்டும், நிறைய பேருடன் போட்டி போட வேண்டும்.
முக்கியமாக சேமிப்பில் கவனமாக இருத்தல் வேண்டும். உங்களை சுற்றி நிறைய பேர் பொறாமை குணம் கொண்டிருக்கலாம்.
உங்களிடம் கனிவாக பேசி, உங்கள் செல்வதை கடன் வாங்கி போகலாம், அபகரித்தும் செல்லலாம்.
எனவே, அப்படியான மக்களிடம் இருந்து நீங்கள் தள்ளியே இருக்க வேண்டும். மேலும், அனைவரையும் நம்பலாம், ஆனால் குருட்டுத்தனமாக நம்புத,ல் கூடாது. எதற்கும் அனைத்திலும் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
6
இந்த இடத்தில் மச்சம் இருப்பது உங்கள் அறிவு கூர்மை மற்றும் கற்பனை சிந்தனை மற்றும் கலை திறனை குறிக்கிறது. உங்களிடம் கலை சார்ந்த திறமைகள் ஏதேனும் மேலோங்கி காணப்படலாம்.
அதை பின்பற்றி சென்றால் உங்களுக்கு புகழ், வெற்றி, செல்வாக்கு நிச்சயம் கிடைக்கும். நீங்கள் தைரியமாக மட்டும் இருந்தால் போதும், வெற்றி உங்களை வந்து சேரும்.
7
நீங்கள் உங்கள் குடும்பத்தார் உடனேயே வாக்கு வாதத்தில் ஈடுபடலாம். இதன் காரணமாக நீங்கள் துக்கமாகவோ, மகிழ்ச்சி இன்றியோ இருக்க வாய்ப்புகள் உண்டு.
இதனால் உங்கள் இல்வாழ்க்கை மற்றும் வேலை தான் பாதிப்படையும். எனவே, எத்தகைய சூழலாக இருந்தாலும், உங்கள் உறவினர், நண்பர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.
8
இந்த இடத்தில் மச்சம் இருந்தால், பொருளாதார ரீதியாக சில ஏற்றதாழ்வுகள் காணும் நிலை ஏற்படலாம். நீங்கள் அதிகப்படியாக செலவு செய்யும் நபராக கூட இருக்காலாம்.
முக்கியமாக உங்களுக்கு சூதாட்டங்களில் ஈர்ப்பு இருக்க வாய்ப்புகள் உண்டு. மேலும், இந்த இடத்தில் மச்சம் இருக்கும் நபர்கள் தங்கள் எதிர்பாலின நபர்களுடன் கொஞ்சம் ஃப்ளர்டிங் செய்வார்கள், ரொமான்ஸில் ஈடுபட முயல்வார்கள். ஆனால், இது உங்களை சிக்கலில் மாட்டிவிடலாம் எனவே உசாராக இருந்துக் கொள்ளுங்கள்.
9
இவர்களுக்கு தாம்பத்தியம் மற்றும் இதர விஷயங்களில் பிரச்சனை உண்டாகலாம். இந்த மச்சம் கொஞ்சம் மோசமானது தான். இது இன்னல்களையும், சிக்கல்களையும், படையெடுத்து வரவழைக்கும்.
10
இவர்களுக்கு தாம்பத்தியம் மற்றும் இதர விஷயங்களில் பிரச்சனை உண்டாகலாம். இந்த மச்சம் கொஞ்சம் மோசமானது தான். இது இன்னல்களையும், சிக்கல்களையும், படையெடுத்து வரவழைக்கும்.