இன்றைய ராசிபலன் (28/02/2018)

  • மேஷம்

    மேஷம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பயணங்களால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிகொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தைரியம் கூடும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும் நாள்.

  • கடகம்

    கடகம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் திடீர்திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். சிலர் உதவி கேட்டு நச்சரிப்பார்கள். அரசுக் காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

  • கன்னி

    கன்னி: குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக்கூடும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

  • துலாம்

    துலாம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். எதிர்பார்த்திருந்த தொகைகைக்கு வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

  • தனுசு

    தனுசு: சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். தன்னம்பிக்கை குறையும். செய்நன்றி மறந்தவர்களை நினைத்து வருந்துவீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

  • மகரம்

    மகரம்: எடுத்த வேலையை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.

  • மீனம்

    மீனம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள்.