துபாயில் கடந்த 24-ஆம் திகதி மாரடைப்பு காரணமாக ஸ்ரீதேவி இறந்துவிட்டார் என்ற தகவல் தெரிந்தவுடன் அனில் அம்பானியின் 13 இருக்கைகள் கொண்ட ஜெட் விமானம் உடனடியாக அங்கு அனுப்பப்பட்டது.
ஆனால் ஸ்ரீதேவியின் உடல் இந்தியாவிற்கு கொண்டு வர துபாய் நாட்டு விதிமுறைகள் படி அனைத்தும் நடந்து முடிவதற்கு கால தாமதமாகியதால், அம்பானியின் விமானமும் அங்கு இருந்தது.
இந்நிலையில் எல்லாம் முடிந்து இன்று இரவு 9.15 மணிக்கு ஸ்ரீதேவியின் உடல் மும்பைக்கு கொண்டுவரப்பட்டு, அவரது வீட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டது.
அவரிடன் இறுதி ஊர்வலம் நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அம்பானி தனி விமானம் அனுப்பியதற்கான காரணம் என்ன என்பது குறித்து பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது துபாயில் நடிகர் Mohit Marwah-வை Antra Motiwala என்பவர் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக ஸ்ரீதேவி சென்ற போது, அங்கு மரணமடைந்தார்.
Antra Motiwala அம்பானியின் மனைவியும் முன்னாள் நடிகையுமான Tina Munim-ன் சகோதரர் மகள், அதன் காரணமாகவே ஸ்ரீதேவி இறந்த தகவல் தெரிந்தவுடன் அம்பானி தனி விமானம் அனுப்பியதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.