மர்மங்கள் நிறைந்த ஸ்ரீதேவியின் மரணத்தில் எழும் கேள்விகள்?

பிரபல திரைப்பட நடிகையான ஸ்ரீதேவி துபாயில் தனது உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக சென்ற போது, கடந்த 24-ஆம் திகதி இரவு 11.30 மணிக்கு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவலை அறிந்தவுடன் இந்திய திரையுலகமே அதிர்ச்சியில் உறைந்தது. நன்றாக இருந்த ஸ்ரீதேவி திடீரென்று எப்படி இறந்தார்? அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் ஸ்ரீதேவிக்கு இதுவரை மாரடைப்பே ஏற்பட்டது இல்லை எனவும் மது அருந்தும் பழக்கமும் ஸ்ரீதேவிக்கு அறவே இல்லை எனவும் கூறிவருகின்றனர்.

அவரது மரணத்தில் பல சந்தேககங்கள் இருப்பதாக கூறி துபாய் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருவதாகவும் செய்திகள் வந்தன.

முதலில் மாரடைப்பு காரணமாக இறந்ததாக கூறப்பட்ட நிலையில், அதன் பின் குளியலறை தொட்டியில் தவறிவிழுந்து இறந்துவிட்டதாக கூறப்பட்டது.

இதற்கு காரணம் அவர் போதையில் இருந்ததாகவும், அதே போதையுடன் குளியலறைக்குச் சென்றபோது, அங்கிருந்த குளியல் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.

குளியலறைக்குச் சென்ற ஸ்ரீதேவி சுமார் 15 நிமிடங்கள் போராடிய பின் தான் இறந்துள்ளார். அப்போது அவரை காப்பாற்றுவதற்கு கணவர் போனி கபூர் போராடியுள்ளார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை ஸ்ரீதேவி தங்கியிருந்த எமிரேட்ஸ் டவர் ஹோட்டலில் இருக்கும் மருத்துவமனைக்கு முதலில் அழைத்துச் செல்லாமல் ரஷீத் மருத்துவமனைக்கு கொண்டு சென்றது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

அதுமட்டுமின்றி இரவு 9.30 மணிக்கே இறந்து விட்டதாக கூறப்படும் நிலையில், இரவு 11.30 மணிக்கு அறிவித்து இரண்டு மணி நேரம் தாமதாக அறிவித்தது ஏன்?

திருமண நிகழ்ச்சி முடிந்த பின்னர் இந்தியா திரும்பிய போனி கபூர் மீண்டும் துபாய் வந்து ஸ்ரீதேவியை பார்த்தது ஏன் என்ற கேள்வியும் சந்தேகத்தை ஏற்படுத்தாமல் இல்லை.

இது ஒரு புறம் இருக்கும் போது ஸ்ரீதேவியின் தலையில் காயங்கள் இருப்பதால், அது தொடர்பாக துபாய் பொலிசார் விசாரணை மேற்கொண்டனர். அவரது தலையில் ஆழமான காயம் இருப்பதாக கூறப்பட்டது, தவறி விழுந்த அவரின் தலையில் ஆழமான காயம் எப்படி ஏற்படும் என்ற கேள்வியை இணையவாசிகள் வைக்கின்றனர்.

இறந்த 24 மணி நேரத்துக்குப்பின் பிரேத பரிசோதனை நடைபெற்றது. அதன் பின் அது தொடர்பான அறிக்கையில், ஆக்சிடெண்டல் டிரவ்னிங் அதாவது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கியதால் மரணம் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு மருத்துவ அறிக்கை என்றால், ஒருவர் காயம் காரணமாக இறந்திருக்கிறார் என்றோ, மூச்சுத் திணறி இறந்திருக்கிறார் என்றோதான் குறிப்பிட்டிருக்கும், அதைத் தொடர்ந்து அந்தக் காயம், அவராக ஏற்படுத்தியதா, விபத்தா, வேறு யாரும் தாக்கியதால் ஏற்பட்டதா? என்பதை பொலிசார் தான் உறுதி செய்வார்கள், ஆனால் அவர் தண்ணீரில் விழுந்ததை தற்செயலாக விழுந்ததாக எந்த அடிப்படையில், தடயவியல் அறிக்கை கூறுகிறது என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீதேவி விழுந்த குளியல் தொட்டியின் ஆழமே ஒன்றரை அடிதான், அப்புறம் எப்படி அவர் தண்ணீரில் மூழ்க முடியும்? பாஜக மூத்த தலைவரான சுப்பரமணியம் தனக்கு தெரிந்தவரை ஸ்ரீதேவி குடிப்பழக்கம் கொண்டவர் இல்லை என்றும் அப்புறம் எப்படி அவர் உடலில் மது இருந்தது, அப்படி என்றால் அவரை வலுக்கட்டாயமாக யாரோ குடிக்க வைத்திருக்கிறார்கள், என்னை யாராவது கேட்டால் ஸ்ரீதேவியை கொலை செய்துவிட்டார்கள் என்று தான் கூறுவேன் என்று தெரிவித்தார்.

ஸ்ரீதேவி எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என துபாய் தடயவியல் துறை அறிக்கை உறுதியாக கூறியபோதும், அவர மரணம் குறித்து சந்தேகப்படும் நபர்கள் இதை நம்புவார்களா? என்பது கேள்விகுறியே