திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மரணம், அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரையுலகுக்கு அவருடைய மறைவு மிகப்பெரும் இழப்பாகும்.
அதேசமயம் ஸ்ரீதேவியின் மரணத்தைப் பற்றி சரியான தெளிவு இல்லாததால் அது சர்ச்சைக்கு வழிவகுத்து விவாதமாகியுள்ளது.
நடிகை ஸ்ரீதேவி கடந்த 25-ம் திகதி அதிகாலை மாரடைப்பில் இறந்ததாகத் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரின் தடயவியல் அறிக்கை மற்றும் பிரேதப் பரிசோதனை சான்றிதழ் நேற்று ஊடகங்களில் வெளியாகியது.
அவரது மரணம் பற்றி பல யூகங்கள் கிளம்பினாலும் ஓட்டல் அறையின் குளியல் தொட்டியில் உள்ள தண்ணீரில் மூழ்கியதால் ஸ்ரீதேவி இறந்ததாகவும் அவரது மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை எனவும் தகவல்கள் வெளியாகின.
துபாயில் இன்று அனைத்து நடைமுறைகளும் முடிந்த பின்னர் அவரது உடல் எம்பாமிங் செய்யப்பட்டு இன்று இரவு மும்பை கொண்டுவரப்பட உள்ளது.
சற்று பொறுமையாக கவணித்தால் தமிழக முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கும் ஸ்ரீதேவியின் மரணத்துக்கும் பிறகு எழுந்த மர்மங்களிலும் கேள்விகளிலும் சில ஒற்றுமைகள் இருப்பது நமக்கு புரியும்.
பலராலும் உற்று கவனிக்கப்படும் பிரபலங்களான ஜெயலலிதா மற்றும் ஸ்ரீதேவியின் மரணதில் அரசு தரப்பின் நடவடிக்கைகளில் பெரிய வேறுபாடு உள்ளது.
ஸ்ரீதேவி மறைந்த பின்னர் அதை துபாய் அரசு சிறப்பாக கையாண்டது, அவரது உடல் மருத்துவமனை பினவறைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் ஸ்ரீதேவியின் மரணம் குறித்த சர்ச்சை எழுந்தது. எனவே துபாய் அரசு ஸ்ரீதேவி உடலுக்கு எம்பாமிங் செய்ய காலம் தாழ்த்தியது.
துபாய் அரசு எம்பாமிங் செய்ய கால தாமதம் செய்ததன் பின்னால் ஒரு காரணம் உள்ளது மற்ற நாடுகளில் மரணத்தில் சின்ன சந்தேகம் இருந்தால்கூட உடலை எம்பாமிங் செய்வதில்லை.
ஏனெனில் எம்பாமிங் மூலம் உடலில் செலுத்தப்படும் ரசாயன திரவம் சந்தேகத்துக்குரிய இறப்புக்கான காரணம் குறித்து தெரியாமல் செய்துவிடும். இதனால் தான் ஸ்ரீதேவியின் உடலுக்கு எம்பாமிங் செய்ய கால தாமதம் ஆனது.
ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் திகதி இரவு இறந்ததாக அறிவிக்கப்பட்டார். அவரின் மரணத்தை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன இத்தனைக்கும் பல கோடி தமிழ்மக்களின் முதல்வராக இருந்தவர். ஆனால் அவர் மறைந்த உடனே அவருடைய உடல் எம்பாமிங் செய்யப்பட்டது.
துபாய் பொலிசார் ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் உள்பட அனைவரிடமும் மீண்டும் மீண்டும் விசாரணை நடத்தி வருகிறது. அவர் தங்கியிருந்த நட்சத்திர விடுதியின் சி.சி.டி.வி காட்சிகள் அலசப்பட்டு வருகின்றன. மொத்தத்தில் துபாய் அரசு தரப்பு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுளது.
அதேநேரம் ஜெயலலிதா இறந்த போது அவரது ரத்தத்தில் 6.2 என்ற அளவுக்கு பொட்டாசியம் இருந்ததாக கூறப்படுகிறது ஆனால் ஒருவரின் ரத்தத்தில் 6 என்ற அளவில் பொட்டாசியம் கலந்திருந்தாலே அவரது உயிருக்கு ஆபத்து ஆகும்.
இது பற்றி எந்த விளக்கமும் சொல்லாமல் ஜெயலலிதாவுக்கு உடனடியாக எம்பார்மிங் செய்துள்ளார்கள் எனவே ஜெயலலிதாவின் ரத்தத்தில் எப்போதும் பொட்டசியம் அளவு அப்படி இருந்தததா அல்லது அளவுக்கு அதிகமாக பொட்டசியம் இருந்ததால் தான் அவர் இறந்தாரா என்பது போன்ற மர்மங்கள் இன்னும் விலகவில்லை.
மேலும் அவரசரம் அவசரமாக ஜெயலலிதா உடலுக்கு எம்பாமிங் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. ஜெயலலிதாவின் ரத்த மாதிரியும் அல்லது ஏதேனும் உடல் செல்கள் சோதனைக்காக எடுத்து வைக்கப்படவில்லை.
ஜெயலலிதா மரணம் நிகழ்ந்து ஓராண்டு ஆகியும் மர்மங்கள் தொடர்கின்றன. ஒரு மாநில முதல்வரின் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து அம்மாநில மக்களுக்குத் இன்றுவரை எதுவும் விளங்கவில்லை.
ஸ்ரீதேவி மரணத்தில் துபாய் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் ஜெயலலிதா விஷயத்தில் தமிழக அரசு செய்து இருந்தால் இவ்வளவு சர்ச்சைகளும் குழப்பங்களும் இன்றும் நீடிக்காது.