நைஜீரியாவில் சொந்த தங்கையை திருமணம் செய்து கொண்ட அண்ணனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Ekwulobia நகரை சேர்ந்தவர் சியாடி இசிபிக்பீ (25). பள்ளி ஆசிரியரான இவர் 17 வயதான தனது சொந்த தங்கையை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.இது சியாடியின் ஊரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு பெரும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
இது குறித்து சியாடி கூறுகையில், எங்களின் மதத்தின் வேதப்படி நான் செய்தது தவறில்லை.கடவுளின் ஆணைப்படியே தங்கையை திருமணம் செய்து கொண்டேன். என் தங்கையிடமும் என்னை திருமணம் செய்து கொள்ள கடவுள் கூறினார்.
ஆனால் எங்கள் விடயத்தில் அந்த பிரச்சனையில்லை, நான் என் தங்கையை விவாகரத்து செய்தால் கூட ஒரே குடும்பத்தினர் என்பதால் ஒரே வீட்டில் தான் வாழ்வோம் என கூறியுள்ளார்.
இந்த திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்மக்கள் நகரின் கலாச்சார துறை மந்திரி கேப்ரியல் சிக்யூவிடம் புகார் அளித்துள்ளனர்.இதையடுத்து இந்த திருமணத்தை செல்லாது என அறிவிக்கும் நடவடிக்கையை அவர் மேற்கொண்டுள்ளார்.இது குறித்து கேப்ரியல் கூறுகையில், இந்த விடயம் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.இதில் யாருக்கும் பிரச்சனையில்லாமல் முடிவெடுப்பது அவசியமாகும். நல்லவேளையாக சியாடியின் மனைவி இன்னும் கர்ப்பமாகவில்லை.
இந்த திருமணத்தில் சியாடியின் குடும்பத்தினர் பலருக்கு விருப்பவில்லை என கூறியுள்ளார்.சியாடியின் அண்ணன் எமிகா கூறுகையில், ஒரே வீட்டில் சியாடியும் தங்கையும் கணவன் மனைவியாக வாழ்வதை பார்க்க என்னால் உயிரோடு இருக்க முடியாது என வேதனை தெரிவித்துள்ளார்.