பெண் பொலிஸ் உத்தியோகத்தரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர்?

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மீது பாலியல் துஸ்பிரயோகம், அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களை திட்டி அச்சுறுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பணிப்புரைக்கு அமைய, பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு எதிராக விசேட விசாரணைகள் நடத்தப்பட உள்ளன.

பிரதிப் பொலிஸ்மா அதிபரின் காரியாலயத்தில் கடமையாற்றிய, பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார்.

இந்த பிரதிப் பொலிஸ்மா அதிபரின் வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு பிறந்த நாள் கொண்டாடவும், அவற்றின் உன்னிகளை அகற்றவும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்களை குறித்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் பணித்துள்ளார்.

போலி ஆவணங்களை சமர்ப்பித்து எரிபொருளை பெற்றுக்கொள்வதாகவும் குறித்த பிரதிப்பொலிஸ்மா அதிபருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.