பெண் தற்கொலை முயற்சி!

வவுனியா – குருமன்காட்டு சந்திக்கு அருகேயுள்ள ரயில் கடவையில் இன்று மதியம் 12.30 மணியளவில் பெண்ணொருவர் தற்கொலைக்கு முயன்று படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

WhatsApp-Image-2018-02-28-at-12.49.37-1  வவுனியாவில் பெண் தற்கொலை முயற்சி : அபாயநிலையில் தீவிர சிகிச்சை!! WhatsApp Image 2018 02 28 at 12

குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள சிங்கள பிரதேச சபைக்கு அருகேயுள்ள ரயில் கடவைக்கு அருகே யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் ரயில் கடவைக்கு அருகே நீண்ட நேரமாக நின்றுள்ளார். அப்போது அவ்விடத்தில் பணிபுரிந்த கடவைக்காப்பாளர் ஏன் இவ்விடத்தில் நின்கின்றீர்கள் என வினாவிய போது ஒருவருக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் ரயில் சத்தம் கேட்டவுடன் கடவைக்கு அருகே நடந்து சென்றுள்ளார். இதனை அவதானித்த கடவை காப்பாளர் ரயில் வருகின்றது, செல்ல வேண்டாமென தெரிவித்துள்ளார்.

எனினும் அவரின் பேச்சினை செவிமடுக்காது ரயில் கடவையில் தலையினை வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை அவதானித்த ரயில் கட்டுப்பாட்டாளர் ரயிலினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த போதும் குறித்த பெண் மீது ரயில் மோதிச் சென்று விட்டது என சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

WhatsApp-Image-2018-02-28-at-12.49.36  வவுனியாவில் பெண் தற்கொலை முயற்சி : அபாயநிலையில் தீவிர சிகிச்சை!! WhatsApp Image 2018 02 28 at 12